பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகவும் அருமையான, கச்சிதமான வருணனை வால் வருணித்து முடித்துவிட்டு, மேற்கண்ட பாடலிலுள்ள சிஃடுக் குருவியின் இல்லற வாழ்க்கைச் சித்திரத்தையும், சில வரிகளில் வருணித்து முடிக்கிறான். இந்தப் பாடலின் பொழிப் புரைதான் அந்தச் சித்திரம் எனலாம். பாரதியிடம் இந்தத் தன்மையை நாம் பல இடங்களில் காண்கிறோம். அதாவது அவன் பாட்டில் எழுதிய விஷயங்களை, அப்படியே வ னத் திலும் எழுதி வைத்தான்; அல்லது வசனத்தில் எழுதிக் குறிப்புக்கள் போல் வைத்திருந்த விஷயங்களைப் பாட்டாகவும் எழுதினான். இதனால், பாட்டில் விட்டுப்போன விஷயங்கள், அதே விஷயம் பற்றி எழுதிய வசனக் குறிப்பிலும், அதே போல் வசனத்தில் எழுத விட்டுப்போனவை பாட்டிலே செழுமை பெற்றும் இடம் பெற்றன என்று சொல்லலாம், உதாரணமாக, பாரதி 'கர்மயோகி' பத்திரிகையில் முதலில் எழுதி, பின்னர் பாஞ்சாலி சபதத்தின் பொருள் விளக்கக் குறிப்பில் சேர்த்துள்ள 'ஸுர்யாஸ்தமயம்' என்ற வருணனைக் கட்டுரைதான், அவனது பாஞ்சாலி சபதத்தில், "மாலை வருணனைப் பாடல்களாக (பாடல்கள் 147-151) உருப் - பெற்றன; இதைப்போல் 'சிதம்பரம்' என்ற தலைப்பில் அவன் எழுதியுள்ள வசனக் குறிப்பொன்றுதான் (கட்டுரை : கள்-தத்துவம்), * நிலாவும் வான்மீனும் காற்றும்' என்ற கலிதையில் கடைசி இரு பாடல்களாகவும் (பாடல்கள் 5,6) மலர்ந்துள் ளன; 'பொய்யோ, மெய்யோ?' என்ற அவனது பாடலுக்கான விளக்கமாகத்தான் அவனது ' ' பொய்யோ, மெய்யோ?' பற்றிய பின்குறிப்பான வசனப்பகுதியும் உருப் பெற்றது. இத்தகைய பல ஒப்பீடுகளை நாம் அவனது கவிதை, வசனம் ஆகிய இரு பிரிவுகளிலும் காணலாம். இதனைப்போலவே தான் அவனது 'சீட்டுக்குருவி' பாட்டில் சொல்லியவை தவிர, சொல்லவிட்டுப் போனவற்றை உள்ளடக்கிய கட்டுரையாகத்தான் அவனது * சிட்டுக் குருவி' கான்ற கட்டுரை அமைந்துள்ளது. அதில் அவன்' பின்வருமாறு எழுதுகிறான்: ' . ' . ' . ' ' சிட்டுக் குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு 1