பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறியும் காற்றில் விரைவோடு நீந்துவை லட்டுப் படாதேங்கும் கொட்டிக் கிடக்குமிவ் வானொளி யென்றும் மதுவின் சுவையுடு (கவிட்டு) பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று பிடையிலாததோர் கூடு கட்டிக் கொண்டு முட்டைதரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு) முற்றத்தி லேயும் கழனி வெளியிலும் முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு ) இந்தப் பாட்டில் பாரதி சிட்டுக் குருவியின் சுதந்திர மான வாழ்வை மனிதனுக்கோர் ஆதர்சமாகக் கொள் கிறான். சிட்டுக் குருவியும் மனிதனைப் போல் இல்லற வாழ்வு நடத்துகிறது; குஞ்சுகளைப் பெற்றெடுத்து பேணி வளர்க்கிறது: இரை தேடுகிறது; காலையில் விழித்தெழுந்து கடமையில் ஈடுபடுகிறது. ஆனால் மனிதனுக்கோ இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் தான் எத்தனை தடைகள், சூதுவாதுகள், கவலைகள்? சிட்டுக் குருவிக்கு அவை கிடை யா. எனவே சிட்டுக் குருவியைப் போன்று கவலையற்ற, சுதந்திரமான, எனினும் கடமை மறவாத, தவாத வாழ்க்கை: யை மேற்கொள்வோம், என்ற கருத்துத் தான் இதில் பிரதிபலிக்கிறது. ஷெல்லிசைப்போல், பாரதியும் சிட்டுக் குருவியின் சுதந்திர வாழ்க்கையைப் பாராட்டுகிறான்; அதிலிருந்து ஆதர்சம் பெறுகிறான். ஆனால் அதற்குமேல் அவன் ஷெல்லியிடமிருந்து மாறுபட்டு, கடமைகளையும், அந்தக் கடமைகளை அளிக்கும் கவலைகளைப் போக்கும் அவசியத்தையும் நினைவுறுத்தும் விதத்தில் தனது பாடலைப் பாடி முடித்துவிடுகிறான். எனினும் ஷெல்வி பாடிய 'வானம் பாடி ' யின் நேர்முகமான எதிரொலி, பாரதி எழுதியுள்ள • சிட்டுக்குருவி' என்ற கட்டுரையில் தான் (கட்டுரைகள்-கலைகள்) காணப்படுகின்றது; அதிலே சிட்டுக் குருவியின் தோற்றத்தை 228