பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Teach me half the gladness That thy brain must know, Such harmonious madness From my lips would flow The world should listefa theta-as I am listening 20w). ஷெல்லியின் வானம்பாடி இவ்வாறு முற்றுப் பெறு கின்றது. இந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தால், ஷெல்லி கவலை, துன்பம், கண்ணீர், காதலின் திருப்தியுணர்ச்சி எதுவு மில்லாது வானத்திலே பாடித் திரியும் வானம்பாடியை நோக் கிப் பொறாமை கொள்கிறான் என்று தெரிகிறது. மனிதப் பிறவியாகப் பிறக்காத காரணத்தால், அந்த வானம்பாடி பூமியைப் புறக்கணித்து விண்ணிலே பறந்து, சோகம் என்பது துளிக்கூட இல்லாத மதுர கானத்தைப் பொழிகின்றது. ஆனால் மனிதனின் இனிமையான கீதங்கள்கூட, சோக ரசத் தின் வெளியீடாகத்தான் இருக்கின்றது. இதனால் மனிதனைக் காட்டிலும் மேலானதாக வானம்பாடி தோன்றுகிறது. அந்த வானம்பாடியிடமிருந்து ஆனந்தத்தைக் கற்றுக்கொள்ளத் தவிக்கிறான் ஷெல்லி, சோகம் குடியோடிப்போன அந்த ஆனந்தத்தைக் கற்றுக் கொண்டு விட்டால், தானும் அத்த கைய இசையைப் பொழிந்து உலகை மகிழ்விக்க முடியும் என்று எண்ணுகிறான். மொத்தத்தில் இந்தப் பாடலில் ஷெல்லியின் கவலை தோய்ந்த உள்ளத்தின் ஏக்கமும், அந்தக் கவலை நீங்கி மீண்டும் களிப்புத் துள்ளும் பாடல்களைப் உடமாடும் காலம் வராதா என்று ஏங்கும் தவிப்பும்தான் புலப் படுகின்றன என்று சொல்லலாம். - ஷெல்லியின் வானம்பாடி பாரதியை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அதன் விளைவுதான் அவன் பாடிய “சிட்டுக் குருவியைப் போலே!' என்ற பாட்டு:- விட்டு விடுதலை யாகி நிற்பா-இந்தச் சிட்டுக் குருவியைப் போலே!