பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையை அழுது புலம்பியே அரைத்துவிட முடியும். மேலும், இந்தக் கதகதப்பான காற்றில் என் கன்னம் குளிர்ச்சி எய்துவதை நான் உணரக்கூடும்; இறந்து சாகும் எனது மூளைக்கு மேலாக, கடலானது தனது இறுதியான சலிப்புப் பெருமூச்சைச் சுவாசிப்பதையும் நான் கேட்கக் கூடும்* * (வரிகள் 28-35): Yet now despair itself is mild, - Even as the winds and waters are; . 1 coald lie down like a tired child, And yeep away the life of care Which I have boxTle and yet must bear, Ti], death like sleep might steal on me, And 1 1might feel in the war air ) My cheek grow cold, and hear the scal Breathe o'er my dying braina its fast nonotony) விரக்தி நிலையின் காரணமாக, ஷெல்லி தனக்கு மரனாம் , கூட இனிதாக இருக்கு மென்று நம்புகிறான் ; நிராசையையும், கவலையையும் அழுது புலம்பியே கரைத்துவிட முடி, பபு:மென வும், மரணம் தன்னைத் தூக்கம்போல் தழுவும் வரையிலும் தான் அப்படியே கிடந்து உயிரைவிட முடியுமெனவும் பேசு கிறான். விரக்தி நிலையின் உச்ச நிலையை, எல்லாப் பற்றையும் ஆசையையும் லேசாக உதறித் தள்ளிவிடும் ஒரு போக்கை இங்கு நாம் காண்கிறோம். ஷெல்லியின் இந்தப் பாடலையொத்த ஒரு கவிதையைக் பாரதியின் படைப்பிலும் காண்கிறோம், பாரதியும் வாழ்க் கையில் துன்பங்களை அனுபவித்தவன் தான். எனினும் வாழ்க் கையையே வெறுத்து, நிராசையுற்று, மரணத்தைத் தூக்கம் போல் வரவேற்கத் துணியும் மனோநிலைக்கு அவன் ஆளாகி விடவில்லை. இருந்தாலும், அவனும் வாழ்க்கைத் துன்பங்களை மறந்திருப்பதற்காக, தனிமையை நாடிக் கடற்கரைக்கும், தென்னந்தோப்புக்கும் சென்றதுண்டு என்பதையும், 235