பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி .ம கண்டதுண்டு-அதிலே - சாரம் இருக்கு தம்மா! {பிழைத்த தென்னந்தோப்பு, பாடல் 5) என்று பாடியுள் ளதையும், நாம் பாரதியின் வாழ்க்கை வர காற்றிலிருந்தும் பாடல்களிலிருந்தும் அறிவோம். இவ்வாறு, தனிமையை நாடிக் கடற்கரைக்குச் சென்ற பாரதிக்கும் அங்கு புறத்தில் நிலவியத் ஒளிப் பிரவாகத்துக்கு மாறாக, அவனது அகத்தில் இருள் சூழ்ந்திருந்த ஒரு மனோநிலை ஏற்பட்டிருக் கிறது. இதனை அவன் தனது 'ஒளியும் இருளும்” என்ற தனிப்பாடலில் குறிப்பிடுகிறான். ஷெல்லியின் பாடல்களை யொத்த ஓர் எதிரொலியையே நாம் அந்தப் பாடலில் கேட் கிரேம்; வான மெங்கும் மரிதியின் சோதி; மலகள் மீதும் பரிதியின் கோதி; தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி; ம!னவன்ற்ல்: உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது என்னே! (பாட்டு 1) பாரதியும் இத்தகையதோர் அனுபவத்துக்கு ஆளாகி யுள்ளான் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தகையதோர் அனுபவம் பெற்ற ஷெல்லியின் பாடலாலும் அவன் பயன் பெற்றிருக்கிறான் என்பதை மேற்கண்ட பாடல் புலப்படுத் தும், ஷெல்லியின் பாடல்களில் முதல் பாட்டை அப்படியே நினைவூட்டுகிறது இந்தப் பாடல், இவ்வாறு பாடுகின்ற . பாரதி இதே கருத்தை, மேலும் பல காட்சிகளால் வருணித்து, ஈற்றடிகளில் அந்த இருளை மீண்டும் கண்டு வியப்புறுகிறான்: சோதி என்னும் நிறைவில் துலகை சூழ்ந்து நிற்க, ஒரு தனிநெஞ்சம்