பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

And that the flowers of this departed spring Were fading On my grave! And that any father Were celebrating not one feast for all). இதேபோல், பாஞ்சாலியைத் துரியோதனனின் சபைக்கு அவனது தம்பி துச்சாதனன் இழுத்துக் கொண்டு வந்த சிக்கியத் தில், அவள் அந்தச் சபையில் கூடியிருந்தோரை நோக்கிப் பின்வருமாறு புலம்புகிறாள்:

    • வான் சபையில்

கேள்வி பலவடையோர், கேடிலா நல்லிசைகோர் வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள், மேலோர் இருக்கின்றார். வெஞ்சினமேன் ... கொள்கிலரோ?.... (பாட்டு. 271-வரிகள்34-37). பாஞ்சாலியின் இந்த முறையீடு பீட்ரைஸின் முறையீட் டின் எதிரொலிபோலவே ஒலிப்பதை நாம் காணலாம், மேலும், ஷெல்லியைப் போலவே பகைவனுக்கருளும் நன் னெஞ்சு படைத்த பாரதியும் பலாத்கார வழியை ஒப்புக் கொள்ளாதவன் தான். ஆனால் பாஞ்சாலியைத் துச்சாதனன் தெருவழியே இழுத்துக் கொண்டுபோன காட்சியைக் கண்டு செயலழந்து நின்ற மக்களை நோக்கி, பாரதி கவிக்கூற்றாகப் பின்வருமாறு சீறுகிறான்: நீண்ட கருங்குழலை நீசன் கரம் பற்றி முன்னிழுத்துச் சென்றான், வழிநெடுக மொய்த் தவராய், 'என்ன கொடுமையிது' என்று பார்த்திருந்தார், ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமிலY நாய்கள் விலங் காம் இள வரசன் - தன்னை மிதித்துத் தரா தலத்தில் போக்கியே பொன்னை அ கள் அந்தப் புரத்தினிலே போக்கால் நெட்டை மரங்களென நின்று புலம்பினார்! (பாட்டு 271 --வரிகள் 14--21), - 241