பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • ஷெல்லி தனது நொடித்துப்போன மனோ நிலையில்

எழுதிய, 'மேல் காற்று' என்ற கவிதையின் முடிவில், மாரிக் காலம் வந்துவிட்டால், வசந்தம் மட்டும் மிகவும் பின் தங்கியா நின்றுவிடும்? (If Winter comes, can Spring be far behind?) என்று கேள்வி விடுத்து, தனக்குத்தானே நம்பிக்கை பூட்டிக் கொள்வதை முன்னர் பார்த்தோம். இதேபோல், பாரதியும் 1907-ம் ஆண்டில் வங்காளத் தில் தேசபக்தர் பூபேந்திர நாதர் சிறைப்பட்ட காலத்தில் தான் பாடிய பாட்டைப் பின்வருமாறு கேள்வி விடுத்தே முடிக்கிறான் : முன்னாளில் துன்பின்றி இன்பம் வரா தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே (பூபேந்திர விஜயம்--டசாட்டு 4) துன்பத்துக்குப் பிறகு இன் படம் வரும் என்று சொல்வதும், நம்புவதும் நமது பாரத நாட்டு மரபுதான் என்றாலும், துயரம், தரும் சம்பவத்துக்குப் பின்னர் மீண்டும் தன்னம்பிக்கை பெறும் விதத்தில் இந்தக் கூற்றை முத்தாய்ப்பாகக் கூறி முடிப்பதை, பாரதி ஷெல்லியின் மேல் காற்றிலிருந்து சுவீ - கரித்துக் கொண்டான் என்றே சொல்லலாம். இவ்வாறு நாம் ஷெல்லியின் பல கருத்துக்கள், கவிதைகள் ஆகிய வற்றின் தெளிவான அல்லது மெல்லிய பல எதிரொலிகளைப் பாரதியின் பாடல்களிலும் படைப்புகளிலும் பரக்கக் காண முடிகிறது ,