பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்வது இந்திய மரபில் பண்டைக்காலம் தொட்டே, நிலவி வந்துள்ள உண்மைதான். ருக்வேதம்சுட்டி விருத்திரா சுரன் என்ற அசுரனைப் பாம்பு வடிவத்தில்தான் காண்கிறது: இந்த அசுரனை இந்திரன் வெற்றி கண்டான் என்று வேதம் கூ. கிறது. இதனைப் பாரதியே தனது "விடுதலை' என்னும் கவிதை நாடகத்தில் இந்திரனின் கூற்றாகப் பின்வரும் 07 2 பாடுகிறான் : விருத்திராக் ஒs7சியினை மறைத்திடும் வேடர்!... பெயர்பல் காட்டும் ஒருகெ.! டும் பேயே? . உருப்பல்ல காட்டும் ஒருதலைப் பாம்பே! {காட்சி 1} இங்கு பாம்பு தீமையின் வடிவமாகச் சித்திரிக்கப் கப் படுகிறது. இதே உருவகத்தைப் பாரதி தல் கவிதை களில் சில இடங்களில் கையாள்கிறான். உதாரணமாக, அவனது 'பக்திப்'ப் பாட்டில், - . - பாம்பு கடித்த விஷயகன்றே நல்ல சேர்வைகள் சேரும்.... {{பாட்டு 4 -பொய்ப் - பாம்பு மடியும், .. என்றும், 'ஜய பேரிகை' என்ற பாட்டில் . ஐயமெனும் பேய்தனை அடித்தோம்-பொய்மைப் - பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்! (பாட்டு 1) என்றும் பாடுகிறான். இவற்றில் பாம்பை மிடிமைத் துன்பமாகவும், பொய்மையின் தோற்றமாகவும் அவன் கா! ண்கிறான். ஷெல்லி தனது *சுதந்திரப் பனுவலில் மன்ன ராட்சியானது; நாகபாசங்களைப் போல் மக்களைக் கட்டிப் பிணைத்துள்ளது என்றும், அந்தக் கட்டுக்களை வெற்றி வாளால் வெட்டியெ ழிய வேண்டும் என்றும் LYாடியதை நாம்