பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னர் பார்த்தோம். இதே போன்று பாரதியும் தனது 'புதிய ருஷ்யா' என்ற கவிதையில்- ஜார் மன்னனின் ஆட்சி யைப் பற்றிக் கூறும்போது,

  • " ....பொய், சூது, தீமை எல்லாம்

அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந் தோங்கினலே அந்த நாட்டில்! {பாட்டு 2) என்று பாடுகிறான், இங்கு பாம்புகளைப் பொய், சூது, தீமை யாவற்றுக்கும் உவமையாக்குகிறாள். இவ்வாறு பாரதியும் பாம்பைத் தீமையின் - உருவகப்பொருளாகக் கொண்ட, காரணத்தால்தான், அவனது தனது 'சக்தி' என்ற பாடலில் சக்தியின் தன்மையை பற்றிப் பாட்டி வரும்போது, “ பாம்பை அடிக்கும் படையே சக்தி" (பாட்டு 2} என்று பாடுகிறான். இந்த வரியில் பாம்பு என்பது எல்லா விதமான தீமைகளை யும், படை என்பதில் மனிதவர்க்கம் முழுவதையும் உருவகம் படுத்தி நிற்கிறது என்பதை நாம் லகுவில் ஊகிக்கலாம். பாரதி தனது கவிதைகளில் தமிழுக்கே புதியதான கற்பனைகளையும், உவமைகளையும், உணர்ச்சி வெளியீடுகளை யும் கையாண்டான் என்று மேலே சொன்னோம். அத்தகைய புதுமைகளைக் கையாள்வதற்கு, அவனுக்கு வேற்று நாட்டு மரபில் விளைந்த இலக்கியங்கள். குறிப்பாக ஆங்கில இலக்கியங்கள் துணை புரிந்தன என்று கொள்ளலாம். இவற் றிலும், அவன் ஷெல்லியின் உவமைகள், உணர்ச்சி வெளி யீடுகள் முதலியவற்றின் மூலம் பெரிதும் பயன் பெற்றான், ஷெல்லியின் சில உவமைகள் அவனுக்கு அவற்றினடிப்படை யில் புதியதொரு கவிதையைப் படைப்பதற்கும்கூட, அடியெடுத்துக் கொடுக்கும் விதத்தில் - அமைந்திருந்தன என்றும் சொல்லலாம். உதாரணமாக, ஷெல்லி தனது , 'எபிசைக்கிடியான்' என்ற அற்புதமான கவிதைக்காக எழுதிய சில துணுக்குகளையும் உலகுக்கு விட்டுச் சென்றிருக் கிறான்; அந்தத் துணுக்கொன்றில், பாலியப்பருவம் உலகை நோக்கும் விதம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்: “ “ இந்தப் 262