பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரெஞ்சுப் புரட்சியின் "விளைவாகத் தோன்றிய ஒரு ஜன நாயகவாதி. அவர் எழுதிய 'அரசியல்' (Political Justice) என்ற நூல் அது தோன்றிய காலத்தில் பெரிய பரபரப்பையே உண்டாக்கியது. ஷெல்லிக்கு அவரது கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. காட்வினின் உதவியில்லாமல் ஷெல்லி யைப் புரிய முயலும் முயற்சி, பைபிளின் உதவியில்லாமல் மில்டனைப் புரிந்து கொள்ள முயல்வதைப்போல் சிரம் சாத்தியமானது என்று கூடச் சில விமர்சகர்கள் (Brailsford) கூறுவார்கள். ஆனால், ஷெல்லியின் இளமைப் பருவத்தில் காட்வினின் பெயர் மங்கிப் போய் விட்ட து அவன் அவரை இறந்து போனவராகவே கருதியிருந்தான். அவர் உயிருட னிருப்பது தெரிந்ததும், அவருடன் கடிதத் தொடர்பு கொண்டு நேர்முக நட்பையும் சம்பாதித்துக் கொண்டு விட்டான். ஷெல்லி காட்வினின் வீட்டுக்குப் போய்வந்த காலத்தில், அங்கு காட்வினுக்கும் அவரது இறந்து போன முதல் மனைவியான மேரி உல்ஸ்டோன்கிராப்ட் (Miary W/olestonecraft}டுக்கும் பிறந்த பதினாறு வயதுக் குமரியான மேரியோடு பழகும் சந்தர்ப்பம் ஷெல்லிக்குக் கிட்டியது. மேரியின் தாய் இங்கிலாந்தில் பெண் விடுதலைக்காகப் போராடிய முதற் பெண்மணி எனக் கூறவேண்டும்; தாட் வினோ காதல் உட்பட எல்லாவற்றிலும் விடுதலை வேண்டிய புரட்சிவாதி. இவர்களிருவருக்கும் பிறந்த மேரியும் முற் போக்கான எண்ணங்களிலேயே வளர்ந்திருந்தாள். ஷெல்லிக் கும் அவளுக்கும் மிகுந்த கருத்தொற்றுமை இருந்தது. சொல்லப்போனால் ஷெல்லியின் கருத்துக்களையும், மனோ பாவங்களை யும் மேரிதான் நன்கு புரிந்து கொண்டிருந்தாள்; ஹாரியெட் புரிந்து கொள்ளவில்லை இந்தச் சூழ்நிலை -யில் மண வாழ்க்கையில் கசப்புற்றிருந்த ஷெல்லிக்கு மேரியின் மீது காதல் தோன்றியது; அவளும் அவனைக் காதலித்தாள். சொல்லப்போனால், ஷெல்லி பி ன் ன ர் எழுதிய ரோ ஸவிண்டும் ஹெலனும் {Rosasind and Helen) என்ற கவிதையில் கூறியுள்ள கருத்துப்படி, 'காதலற்ற திருமண பந்தத்தைக் காட்டிலும் திருமண பந்தமற்ற உண்மைக் காதல் எவ்வளவோ மேலானது' என்றே அவன் 28