பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதினான். இந் நிலையில் 1814-ம் ஆண்டில் ஷெல்லி மேரி யைக் கூட்டிக்கொண்டு, ஐரோப்பாவுக்குச் சென்று விட்டான். அன்று முதல் அவனது இறுதிக் காலம் வரை யிலும் மேரியே அவனது மனைவியாக இருந்தாள்; அவன் இள வயதிலேயே இறந்த பின்னரும்கூட., அவள் மேரி ஷெல்லி என்ற பெயரை இழக்க விரும்பாமல், இறுதிவரையிலும் மறு மணம் செய்து கொள்ளாமலே இருந்தாள். ஷெல்லி தன் முதல் மனைவியை விட்டு விலகிய பின்னரும், அவள்மீது அனுதாபம் கொண்டு, தனது வறுமை நிலையிலும் அவளது வாழ்க்கைத் தேவைக்கான பணத்தை அனுப்பி வந்தான். ஆனால் அவளோ வாழ்க்கையில் விரக்தியுற்று 1816-ம் ஆண் டில் நீரில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டாள். ஹாரியெட்டின் இந்த மரணத்துக்குப் பின்னர் ஷெல்லி மேரியை முறைப்படி மணம் புரிந்து கொண்டான். அதன் பின் அவன் மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தான். 'ஆனால், அவனது நாஸ்திக வாதத்தாலும்,, மரபை மீறிய மண வாழ்க்கையாலும் அவனுக்குக் கெட்ட பெயரே ஏற்பட் டிருந்தது. இதனால் அவனது குழந்தைகளை அவனது பரா மரிப்பில் விடுவதற்கு, நீதி மன்றம் மறுத்து விட்டது; அவனால் அவர்களைப் பராமரிக்க முடியாதென்றும், அந்தக் குழந்தைகளும் அவனைப்போல் கெட்டுப் போய்விடுவார் களென்றும் கூறியது. இதனால் மனமொடிந்து போன ஷெல்லி தன் மனைவி மேரியோடு தனது தாயகமான இங்கி லாந்தை விட்டு , நிரந்தரமாக வெளியேறி இத்தாலிக்குச் சென்றான். எனவே அவனது வாழ்க்கையே தேசப் பிரஷ்ட வாழ்க்கைபோலாகி விட்டது. ஷெல்லியின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதிக் காலம் வெளிநாட்டில் தான் கழிந்த து. இத்தாலியில் லெரிஸி என்ற இடத்தில் தங்கியிருந்த காலத்தில்தான் அவனது . அகால மரணம் சம்பவித்தது. ஷெல்லிக்கு நீந்தத் தெரியாது. எனினும் அவனுக்குக் கடலின்மீது படகில் சென்று திரிவ தில் மிகுந்த ஆசை. அவ்வாறு அவன் தன் நண்பர்கள் சிலரோடு ஸ்பெனியா