பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைகளும் நிலவின. பிரெஞ்சுப் புரட்சியின் லட்சியங்கள் உன்னதமாக இருந்தபோதிலும், அதை வழி நடத்தியவர் களின் அத்துமீறிய போக்கினைக் கண்டு மனம் கசந்தும், உள் நாட்டில் நிலவிய அடக்கு முறையால் அடங்கி ஒடுங்கி விரக்தியுற்றும் போயிருந்த மனோநிலை ஒருபுறம் ; அந்த லட்சியங்களால் கவரப்பட்டு, மனித குலத்தின் மீது நம்பிக்கை இழக்காது, அந்தக் கனவை நனவாக்க வேண்டும் என்ற லட்சிய தாகத்துக்கு ஆளான மனோநிலை ஒரு புறம். ஏறத்தாழ, சமகாலத்தில் வாழ்ந்து, அற்பrயளிலேயே மாண்டுபோன கவிஞர்களான கீட்ஸ், பைரன், ஷெல்லி மூவரையும் எடுத்துக் கொண்டாலே நாம் இந்த வேற்றுமை களைக் காணலாம். சீட்ஸ், அழகின் ஆராதனையில் ஈடுபட்டி ருந்த சிறந்த கவிஞன்தான்; எனினும் பிரெஞ்சுப் புரட்சியின் லட்சிய கோஷங்களோ, நாட்டில் நிலவிய படுமோசமான நிலைமைகளோ. அவனது உள்ளத்தைத் தொடவில்லை : இவற்றைப் பிரதிபலிக்கக்கூடிய கருத்துக்களே அது இது 'படைப்புக்களில் மிகமிக அரிதுதான். டைக்ரன், ஷெல்லி இருவரும் பிரெஞ்சுப் புரட்சியால் புதிய விழிப்புப் பெற்று இலக்கியம் படைக்க முன்வந்தவர்கள். இருவரும் அன்றைய சமுதாயத்தின் இழி நிலைமைகளை வன்மையாகக் கண்டித்த அர்கள். ஆயினும் இவர்கள் இருவரது வளர்ச்சிப் போக்கிலும்ககூட வேற்றுமை உண்டு. சொல்லப் போனால், அந்த லட்சிய கோஷங்களை இதயபூர்வ 43r"க உணர்ந்து, அவற்றை ஏற் று, மானிட வர்க்கத்தையெல்லாம் அரவணைக்கும் மனிதாபிமானத்தோடு இலக்கியம் 263டத் தவன் ஷெல்லி மட்டும் தான், ஷெல்லி தனது *இஸ்லாமின் , புரட்சி' என்ற காவியத்துக்கெழுதிய முன்னுரையில் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நிலவிய சோர்வான பனே நிலையைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, அந்த நிலை நீடிக்கா தம் என் உறுதிகூறி, அதன்பின் பின்வருமாறு எழுதுகிறான் : "' ஆனால் மனித வர்க்கம் தனது மயக்க நிலையிலிருந்து விடு பட்டு வருவதாகவே எனக்குத் தோன்றுகிறது, மெதுவான, &.டிப்படியான, அமைதியானதொரு மாற்றம் நிகழ்ந்து, வருவதை நான் காண்பதாகலே தோன்றுகிறது. அந்த