பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 'சகிக்க முடியாத வரிக்கொடுமை நிலவிய ஒரு சகாப்தம்

அது. பெரும்பான்மையான மக்கள் அனைவரும் தமது அத்தி யாவசியமான வாழ்க்கைத் தேவைகளைக்கூடப் பெறமுடி யாது சிரமப்பட்ட காலம் அது. மரண தண்டனை அளிக்கக் கூட இருநூறுக்கும் மேற்பட்ட குற்றங்களாகப் பலவற்றைச் சட்டப் புத்தகத்திலே சேர்த்து, ஒரு மிலேச்சத்தனமா என கொலைகாரச் சட்டத்தையே இயற்றிய சகாப்தம் அது . படுமோசமான சிறைக்கூடங்களும், மிருகத்தனமா ன, தான் டனை முறைகளும் நிலவிய காலம் அது. குடியேற்ற நாடு களில் யதார்த்தமான அடிமைத் தனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்த, உள் நாட்டிலும் அடிமைத்தனத்தை நோக்கி நெருங்கிச் செல்லும் நிலைமைகள் உருவாகித் தேன் பட்டு வந்த சகாப்தம் அது, ஆலைச்சட்டம் பற்றி அறியாத, குழந்தைகளை வேலை வாங்கும் ராக்ஷஸ த்தனமான கொடுமை தடுக்கப்படாமலிருந்த, தமது உயிர் வாழ்க்கைக்கு மட்டும் தேவையான பரிதாபகரமான குறைந்த பட்சக் கடிவியைச் , சம்பாதிப்பதற்காக ஆண்களும் பெண்களும் பலமணி நேரம் கணக்கில் பாடுபட்டு உழைத்து வந்த காலம் அது. பிச்சை? காரர்களும், தொற்று நோய்களும், முரட்டு சு.ரவங்களும் , எழுத்தறிவின்மையும் நிலவிய காலம் அது. ஜனங்கள் இன்னும் சாதாரண கோச்சு வண்டிகளிலேயே பிரயாணம் செய்து வந்த, நாம் வசதியானவை, சுகமானவை என்று கருதும் எந்தவித வாகன வசதிகளும் தெரிந்திராத காலம் அது. வியாபாரமாகி விட்ட அரசியலும், அழுகிச் சீரழிந்த நிர்வாக சபைகளும், சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களி டையே அளவுக்கு மீறிய ஏற்றத்தாழ்வுகளும் நிலவி வந்த சகாப்த ம் அது {The Greater English Poets of the Nineteent? Cerntury-William Morton Payne). இத்தகைய தொரு சூழ்நிலையில் கவிஞர்கள் அறிஞர்கள் முதலியவர்களின் உள்ளங்களிலெல்லாம் தர்மாகேச உணர்ச்சியும் மனிதாபிமானமும் கொழுந்து விட்டு எரிய முனையும் என்று எதிர்பார்ப்பது இயற்கை. ஆனால் இங்கிலாந்தில் இந்தச் சூழ்நிலையில் இரண்டு விதமான மனே