பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவுடைமை கண்ட புதுமைக் கவிஞர்கள் ஷெல்லி, பாரதி இருவருமே பிரெஞ்சுப் புரட்சியின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய முப்பெருங் கோஷங்களையும் லட்சியங்களாக ஏற்று, புதுமையும் புரட்சி யும் மிகுந்த கவிதைகளை ஆக்கித் தந்தார்கள் என்று முன்னர் பார்த்தோம். ஷெல்லியே * பிரெஞ்சுப் புரட்சியின் குழந் தை” தான் என்றும் குறிப்பிட்டோம். பிரெஞ்சுப் புரட்சி யானது உன்னதமான லட்சியங்களைக் கொண்டு ஆரம்பத் தில் வெற்றி பெற்றாலும், அதனைத் தலைமைத் தாங்கி, பிரெஞ்சுக் குடியரசை வழிநடத்திச் சென்றவர்களின் தலை கால் தெரியாத, அத்து மீறிய போக்குகளால், அந்தப் புரட்சியே குட்டிச்சுவராகி, நெப்போலியனின் வடிவத்தில் பிரெஞ்சு நாட்டில் மீண்டும் மன்னராட்சி தலைதூக்க நேர்ந் ததும், அதனால் அந்தப் புரட்சி தோற்றுப்போன தாம் சரித் திரம் கூறும் உண்மைகள். எனவே ஒரெஞ்சுப் புரட்சியின் வெற்றி தாற்காலிகமானதாகத்தான் இருந்தது. ஆனால் பிரெஞ்சுப் புரட்சியின் தோற்றத்துக்குப் பின்னர், அதன் விளைவாக இங்கிலாந்தில், புதிய விழிப்பு ஏற்பட்டது என்று முன்னர் குறிப்பிட்டோம், அதேபோல், அதற்கு எதிர்மறை யாக , இங்கிலாந்தில் அரசாங்கத்தின் அடக்குமுறை முதலி எனவும் அதிகரித்தன. அந்தக் காலத்தில் அங்கு நிலவிய சூழ்நிலை பற்றி, வில்லியம் மார்டன் பேனீ என்ற விமர்சகர் பின்வருமாறு எழுதுகிறார்: - 278