பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கொளுத்தித் தள்ளிவிட்டான்!” என்றும், படுபாவி மகள்! எப்படிப் பாடுகிறாள் தெரியுமா?” என்றும் கூறுவதை நாமே நினைவு கூரலாம். கொல்வதையும் கொளுத்துவதையும் உச்சபட்சமான பாராட்டுக்குரிய சொற்களால் நாம் பயன் படுத்துகிறோம். நமது அன்புக்கும் பாராட்டுக்கும் உரியவர் களைப் 'பாவி' என்று கூடக் கூறுகிருேம், இல்லையா? இவ்வாறு அன்பு, இன்பம், பரவசம் ஆகியவற்றின் மிகுதியை எதிர்மறைச் சொற்களால் வழக்கில் குறிப்பிடும் உண் 4634.பசுகத் தான் பாரதி கவிதையிலே கையாண்டான். எனவேதான் அவன் தனது * கண்ண ன் பாட்'டில் பின்வருமாறு 2.417°டினான்: நேரம் முழுவதும் அப் பாவி தன்னையே-உள்ளம் நினைத்து மருகுதடி தங்கமே தங்கம்! (கண்ண ன் என் காதலன் 13; 437ட்டு &) இதனைப் போலத்தான் அவன் “கொன் றிடும் என இனி தாய்' என்றும் ' * கொல்லும் அமிழ்து' என்றும் இனிமைசின் சிகரத்தை எதிர்மறையாகக் குறிப்பிடுகிறான். இவ்வாறு குறிப்பிடுவது தமிழ் மரபுக்கும் வழக்குக்கும் இசைந்தது தான் என்றாலும், மேலே நாம் கண்டு வந்த பாரதியின் மேற்கோள்கள் அனைத்தும், சிகரமான உணர்ச்சி வெளியீட் டைக் குறிக்கும் புத்தம் புதிய பதச் சேர்க்கைகளாகவும் , தமிழுக்கே - புதியனவான உவமைகளாகவும்தான் நமக்குத் தோற்றுகின்றன, இத்தகைய புதுமையான தோற்றத்தை யும் பொருளையும் தரச்செய்யும் வலிமையையும் செழுமை யையும் பாரதி ஷெல்லியிடமிருந்து சுவீகரித்துக் கொண் டான் என்றே நாம் சொல்லலாம். இதன் காரணமாக: அவனது இத்தகைய எதிர்மறையான உவமைகள் தமிழ் வர புக்கு இசைந்ததாக' இருப்பினும், ஷெல்லியின் கூற்றுகளைட்! பெரிதும் அனுசரித்துப் பிறந்த எதிரொலிகளாகவே ஒலிக் கின்றன.