பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புக்கு அன்னியமானதல்ல. நாட்பட்ட கள்ளின் இனிமை யைக் குறிப்பிட வந்த புறநானூற்றுப் புலவன் “'தேட். கடுப் பென்ன நாட்படுந் தேறல்" எனக் குறிக்கின்றான், கள்ளி லிருந்து எழும் போதையின்பம் தேரின் விஷக் கடுப்பைப் போல் பரவி இன்பம் தருவது என்பது அவனது குறிப்பு. காதல் இன்பத்தைக் குறிக்க வந்த புலவர்கள் பலரும், காதலியை இன்பத்தின் சிகரமாகக் கருதுவதை, மரணம், விஷம் போன்ற உவமைகளால் சுட்டிக் காட்டியுள்ளார்கள். வள்ளுவனே தனது காமத்துப் பாலில், “ “ பண்டறியேன் கூற்று என்பதனை; இனிய றிந்தேன்; பெண்தகையார் பேர மர்க் கட்டு' (1083) என்று பெண்களின் கண்களை எம னுக்கு (மரணத்துக்கு) உவமிக்கிறான்; * *கண்டார் உயிருண் ணும்” கண் (1884) என்றும் கூறுகிறான்; காதலியின் பார்வையைக் ' கூற்றமோ?' என்று எண்ணி வியக்கிறான். பிற்காலத்தில் வந்த ஒரு புலவன் காதலுற்ற பெண்ணின் கண்ணை வருணிக்கும் போது • *நஞ்சிலே தோய்ந்த நளின விழிப் பெண் பெருமாள் *' (தனிப்பாடல்) என்றே வருணிக் கிறான். காதலால் எய்தும் பரவசத்தையே நம்மவர்கள்

  • இன்ப வேதனை' என்று எதிர்மறையாகக் குறிப்பிடுவதையும்

நாம் அறிவோம். எனினும் இவ்வாறு நெருப்பு, விஷம் : மரணம் போன்ற இனிமைக்கு எதிர்மறையான உவமைகளை நமது தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும், காதல் சம்பந்தப் பட்ட விஷயத்துக்குத்தான் பயன்படுத்தியுள்ளார்கள். அதிலும் காதலால் எய்தும் இன்ப சிகரத்தைக் காட்டிலும், காதலால் ஏற்படும் விரகதாபத்தையும் வேதனையையும் புலப்படுத்தவே அவற்றைப் பெரிதும் கையாண்டார்கள் எனலாம். எனினும் உச்சபட்சமான ஒரு மன நிறைவை, மகிழ்ச்சியை, அன்பை வெளியிடுவதற்கு, 'எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நாமே நமது. அன்றாடம் பேச்சு வழக்கில் காணலாம். நல்ல கச்சேரி, நல்ல இலக்கியப் படைப்பு, நல்ல நாட்டியம் முதலியவற்றை நாம் விதந்தோதிப் பாராட்ட முனையும்போது, 'என்ன மாதிரி பாடினாள் தெரியுமா? - கொன்றுவிட்டாள், கொன்று! என்றும், * 'என்ன மாதிரி. எழுதியிருக்கிறான் தெரியுமா?