பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவித்ததோ, அதே போன்று பாரதியின் சுவிதா சக்தியும், திருஷ்டியும் நமது நாட்டில் புதிய இலக்கிய பரம் பரையும், கவிஞர் பரம்பரையும் தோன்ற உதவின என்பு தையும், இன்றைய இலக்கிய சகாப்தமே 'பாரதி பரம்பரை: என்றும் 'பாரதி சகாப்தம்' என்றும் - பெயர் பெற்றிருப் பதையும் நாம் அறிவோம்., ஷெல்லி நெடுங்காலம் உயிர் வாழ்ந்திருந்தால், அவன் சோஷியலிஸத்துக்கான இயக் கத்திலும் முன்னோடியாக விளங்கியிருப்பான் என்று காரல் A.மார்க்ஸ் கூதியது போல், பாரதியும் தீர்க்காயுள் பெற்றவனாக இருந்திருந்தால் அந்த இயக்கத்துக்கு நமது நாட்டில் ஒரு முன்னோடியாக, தலைவனாக விளங்கி நின்றிருப்பான் என்றும் நாம் கொள்ளலாம். இவ்வாறு இந்த இரு கவிஞர்களும் தாம் வாழ்ந்த காலத்தை நன்கு நோக்கி அதன் பெருமைகளை யும் சிறுமைகளை யும் தேவைகளையும் பிரதிபலித்ததோடு, மட்டுமல்லாமல், தத்தம் நாட்டின் எதிர்கால சமுதாயத் தையும் தீர்க்க தரிசனத்தோடு நோக்கி, அதனையும் வகுத் துரைத்த காரணத்தால், அவர்கள் தமது நாட்டு மக்க : எளிடையே பெருமதிப்பைப் பெற்றுள்ளனர். மேலும், இரு வரும் மனித குலத்தின் சகலவிதமான விடுதலைகளுக்காகவும் - பாடி, மனித குலத்தை அமரத்துவ நிலைக்குக் கொண்டு செல்லக் கனவு கண்டு, அந்த லட்சிய வேட்கையோடு இலக்கியப் படைப்புக்களை எழுதிச் சென்ற காரணத்தால், இருவருமே உலகத்தின் சிறந்த சிந்தனையாளர்களின் சிறந்த பாரம்பரியத்தில் இடம் பெறுகிறார்கள்; அதன் மூலம் சீரஞ் சீவிகளாக வாழ்கிறார்கள். ஷெல்லி , தனது, 'கட்டறுந்த பிராமித்தியூஸ்' என்ற கவிதை நாடகத்துக்கெழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறான் : “ நமது . சொந்த சகாப்தத்தின் பெருங் அவி ஞர்கள், நமது சமுதாய நிலைமையில் ஏதோ ஒரு கற்பனை , செய்யாத மாற்றத்தை அல்லது அதனை உருவாக்கும் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கூட்டாளி களாகவும், முன்னோடிகளாகவும் தான் இருக்கிறார்கள் என்று நாம் கருதக் காரணமுண்டு. மனமென்ற மேகம் அது சேர்த்து வைத் | திருந்த மின்னல் வீச்சை வெளியிட்டு வருகிறது ; சமூசு ,