பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்புக்களுக்கும் கருத்துக்களுக்கும் இடையேயுள்ள சமன் நிலை சீராகி வருகின்றது : அல்ல து சீராகும் நிலைக்கு வரவிருக் கின்றது." . ஆம். கவிஞர்களின் கனவும், சமுதாய அமைப்பும் ஒன்று பட வேண்டும் என்ற கருத்தோடும் வேட்கையோடும் பாடு

பட்டு, தனது கருத்துக்குத் தன்னையே சிறந்த உதாரணமாக நிலைநாட்டிச் சென்றான் ஷெல்லி. முன்னவனான (ஷெல்லி காட்டிய இதே பரம்பரையில் இதே கருத்தோடு பாடுபட்டு, தனது சிந்தனையின் சிறந்த மின்னலொளி வீச்சைச் சமுதாயத் தின்மீது பரப்பி , பாரத நாட்டின் சமூக அமைப்பும், தனது கனவும் ஒன்றுபட்டுச் சமநிலைக்கு வரும் பாதையை எதிர் நோக்கும் நிலையை உருவாக்கித் தனது புகழையும் நிலைநாட்டி, நிற்பவன் பாரதி. இவ்வகையில் ஷெல்லியின் கவிதா பரம் பரையில் வந்த சிறந்த வாரிசாகவும் திகழ்கிறன் நமது கவிஞன் பாரதி,