பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானை தூக்கியெறிந்ததால் அடிபட்ட பாரதி, அற்பாயுளில் முப்பத்தொன்பதாவது வயதிலேயே, 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதியன்று மரணம் எய்தி விட்டான், மேலும் சில அம்சங்கள் ஷெல்லியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர்கள் பலரும் அவனது அருள் நிரம்பிய கருணையுள் ளத் தையும், பிறர் துன்பத்தைத் தனது துன்பமாகக் கருதும் பண்பையும் பலபடக் கூறியுள்ளார்கள். மேலும் அவன் தனது வறுமை வாழ்க்கையின் மத்தியிலும் பணத்தின் அரு மையைத் தெரியாது பல காரியங்களைச் செய்தான். ஷெல்லி ஹா ரியெட்டை மணந்து, ஆண்டுக்கு 400 பவுன் உதவித் தொகையைத் தன் குடும்பத்திலிருந்து பெற்றுவந்த காலத் தில், அவன் பணத்தின் அருமை தெரியாமல் புத்தகங்களை வாங்கிக் குவிப்பதிலும், திக்கற்றவர்களுக்கும், துன்பப் . படுபவர்களுக்கும் தாராளமாக உதவுவதிலும் பணத்தைச் செலவிட்டான் (Edmunds): ஷெல்லி மார்லோ (லண்டன்) என்ற பிரதேசத்தில் தங்கியிருந்த காலத்தில் அங்கு லேஸ் பின்னும் பெண் தொழிலாளிகளின் படுமோசமான வாழ்க் கைத்தரத்தை நேரில் கண்டு, அவர்கள் படும் துன்பத்தைக் காணச் சகியாமல், அவர்களுக்குத் தன்னாலான உதவியைச் செய்து வந்தான் (மேரி ஷெல்லி • இஸ்லாமின் புரட்சி' பற்றி எழுதியுள்ள குறிப்புக்கள்). அந்த ஏழைத் தொழிலாளிப் பெண்களுக்குத் தான் போர்த்தியிருந்த போர்வைகளையும், பூட்சுகளையும்கூடத் தானம் வழங்கிவிட்டு, நடுக்கும் குளிர் காலத்தில், வெற்றுக் கால்களோடு வெடவெடத்து விடு திரும்பினான் (Braiisford). மேலும் ஷெல்லியின் நண்பராக் இருந்த ஆங்கில எழுத்தாளர் லே ஹண்ட் (Leigh Hunt) ஹாம்ஸ்டெட் ஷீத் என்ற இடத்தில் நடந்த ஒரு சம்பவத் தைக் கூறுகிறார்: ஷெல்லி ஒரு நாள் இரவில் தெரு வழியே நடந்து செல்லும்போது , ஓர் ஏழை மாது தெருவில் வலிப்புக் கண்டு துடிப்பதைக் கண்டான். உ.னே அவளைத் தூக்கிக் கொண்டு, விளக்கு வெளிச்சம் தெரிந்த பக்கத்து வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி, தங்க இடம் கேட்டான், வீட்டுக்