பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரனோ ஊரில் ஏமாற்றுக்காரர்கள் மலிந்துவிட்டதாகக் கூறி, ஷெல்லியின் நடத்தை அசாதாரணமாயிருப்பதாகக் குற்றம் சாட்டி எரிந்து விழுந்தான ; கதவைச் சாத்தினான். உடனே ஷெல்லி அந்த வீட்டுக்காரனை நோக்கி பின்வருமாறு வாய்விட்டுக் கத்தினான்: ஐயா! உங்கள் நடத்தை அசா தாரணமாக இல்லாதது குறித்து நான் வருந்துகிறேன், உங்களைப் போன்ற மனிதர்கள் த ன் ஏழை மக்களின் பொறுமையையும் உணர்ச்சிகளையும் வெறிபிடிக்கச் செய் கிறார்கள். இந்த நாட்டில் ஏதாவதொரு குழப்பம் வரு மானால்-அநேகமாக அது வரத்தான் டே! கிறது--நான் இப்போது சொல்வதை அப்டேபாது நினைத்துப் பாரும். இந்தப் பரிதாபகரமான பெண்ணுக்கு இடம் தர மறுக்கும் உமது இந்த வீடு, உமது தலை மேலேயே எரிந்து இடிந்து விழுவதை நீரே பார்ப்பீர்! இதன் பின்னர் ஷெல்லி தனது வறுமை நிலையையும் பொருட்படுத்தாமல், அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் செய்ததோடு, அவளுக்கு முடிந்த அளவுக்குப் பண உதவியும் செய்தான். 'நாஸ் திக வாதியாகவும் அராஜகவாதியாகவும் இருக்கும் ஷெல்லி, தனது குழந்தைகளை வைத்துப் பராமரிக்க லாயக்கற்றவன் " என்று இங்கிலாந்தின் சட்டம் தீர்மானித்த சமயத்தில்தான் இந்தப் பரோபகாரப் பணியை ஷெல்லி செய்திருக்கிறான்! இதைப் போலவே நண்பர்களுக்கும், அன்னியர்களுக்கும் கூட, உதவி செய்வதில் ஷெல்லி அக்கறை காட்டினான். அவன் இளைஞனாக இருந்த காலத்தில், தனது தந்தையின் நிலபுலங்களைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் வேளையில், தன், னிடம் கைச்செலவுக்கென்று வைத்திருந்த பணத்தை யெல்லாம் அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்கினான். பெரிய வனான பிறகோ, தனக்கு நண்பர்களாக இருந்த இலக்கிய கர்த்தாக்க சரின் தேவைக்கு உதவுவதற்காக, தனது ஆடை யணிகளின் தேவைகளையும், அவசியமான உணவின் அளவை யும்கூட அவன் குறைத்துக்கொண்டான். அவனது குருநாதர் ': போல விளங்கிய காட்வின், தம் மகளை ஷெல்லி கெடுத்துக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டதாகக் குறைகூறி அவனை வர வேற்கவே தயாராக இல்லா திருந்த போதிலும்கூட, அவ ன்"