பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது தேவைக்குத் தருவதாகச் சொல்லியிருந்த ஆயிரம் டவுனையும் அவனிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார். மொத்தத்தில் அவர் மட்டுமே அவனிடமிருந்து ஐயாயிரம் பவுன் வரையிலும் பற்றிக் கொண்டார், மேலும், லே ஹண்ட், பீக்காக் (Peacock) முதலிய இலக்கிய நண்பர் களுக்கும் அவன் அவ்வப்போது பண உதவி செய்து வந்தான் (Three Studies in Shelley- Archibald Strong). இவற்றுக் கெல்லாம் மேலாக, அரசியல் அடக்குமுறை நிலவிய அந்தக் காலத்தில், 'அபாயகரமான கருத்துக்களை வெளியிட்டதற் காக விசாரிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட எழுத்தாளர் களுக்கும்கூட, ஷெல்லி உதவி செய்தான். தங்கள் கருத்துக் களைத் தெரிவித்த காரணத்தால் தண்டனை பெற்ற இனம் தெரியாத எழுத்தாளர்களுக்கு, அவர்களது அபராதத் தொகையைத் தானே கட்ட முன்வருவதாக ஷெல்லி எழுதினான். அதுமட்டுமல்ல; கையில் சேர்ந்தாற்போல் பத்துப் பவுனை மொத்தமாகப் பார்க்காதிருந்த அந்த வறுமையிலும், அவன் அந்த அபராதத்தைத் தானே' கட்டு வதற்காக அநியாயமான வட்டிக்குக் கடனும் வாங்கினான் {Andre Marois). பாரதியிடமும் நாம் இத்தகைய கருணையுள்ளத்தையும் தாராள மனப்பான்மையையும் காண்கிறோம், வறுமையிலும் செம்மை கண்டு வாழ்ந்தவன் அவன் என்பதை நாம் அறிவோம், எட்டயபுர மன்னன் கொடுத்த 500 ரூபாயில் பெருமளவுக்குப் புத்தகங்களாக வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய பாரதியைப் பற்றிச் செல்லம்மா பாரதி குறிப்பிட்ட டுள்ளார் (பாரதியார் சரித்திரம்). பிறருக்கு உதவி செய்வதி லும் பாரதி மிகுந்த கருணை படைத்தவன் என்பதை அவனைப் பற்றிய வரலாறுகள் பலவும் நமக்குத் தெரிவிக்கின்றன. அவன் புஷ் வண்டிக்காரனுக்கு ஜரிகை வேட்டியையே வழங்கியது, பாம்பாட்டியின் வறுமையைக் காணச் சகிக் காமல் அரை வேட்டியையே அவிழ்த்துக் கொடுத்தது, காரைக்குடியில் பரிசளித்த சர்ஜுக் கோட்டை திருப்பத்தூரில் குளிரால் நடுங்கியவனுக்குக் - கழற்றிக்