பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்லி, பாரதி ஆகியோரின் இந்தச் செயல்களாக வெளிப் பட்டன என்றே சொல்ல வேண்டும். மேலும், நேர்மையுணர்ச்சியிலும், மானவுணர்ச்சியிலும் இரு கவிஞர்களுமே ஒத்த மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தார்கள். தனக்கு உண்மையென்று பட்டது எதையும் மறுக்க அல்லது மறைக்க, பாரதி என்றும் முனை ந்ததில்லை; அதேபோல் ஷெல்லியும் தனக்கு எத்தனை கஷ்டங்கள் நேர்ந்த காலத்திலும் தனது கொள்கைப் பிடிப்பையோ, கோட்பாடுகளையோ கைவிடவில்லை. * 'மானம் சிறிதென் றெண்ணி, வாழ்வு பெரிதென்றெண்ணும்” நடிப்புச் சுதேசி களையும், மாய்மாலக்காரர்களையும் பாரதி அம்பலப்படுத்தி யதை நாமறிவோம். இதேபோன்று ஷெல்லியும் அத்தகைய நடிப்புச் சுதேசிகளை அம்பலப்படுத்தத் தவறவில்லை, உதார ணமாக, ஷெல்லியோடு நேர்முகமாகப் பழகியவரும். அவ னுக்கு நண்பராகவும் . இருந்த ராபர்ட் சவுத்தி (Robert Southey) என்னும் ஆங்கிலக் கவிஞர் ஏதோ ஒரு கட்டுரையில் மூன்றாவது ஜார்ஜ் மன்னரை “சிம்மாசனம் ஏறிய மன்னர்களிலேயே மிகச் சிறந்தவர்” என்று பாராட்டி எழுதியிருந்ததை ஷெல்லி படிக்க நேர்ந்தது. இது முகஸ்துதி யான வாசகம் தான். மேலும் சவுத்தி ஆஸ் தான' கவிஞரா வ தற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவேதான் அவர் மன்னரை இவ்வாறு புகழ முனைந்தார். ஆனால் ஷெல்லிக்கோ இந்தச் செய்கை அருவருப்பைத் தந்தது; இத் தகைய இழிதகை நடிப்பை அவனால் ஏற்க முடியவில்லை, எனவே அவன் தான் இனி அவரை ஒரு கூலிக்கு மாரடிக்கும் அடிமையாகவும், கொடுமையைப் பாராட்டும் குணத்தவ ராகவும்தான் கருதப்போவதாகவும், அவரைத் தான் இனி முகாலோபனம்கூடச் செய்யப் போவதில்லையெனவும் காரசாரமாக அவருக்குக் கடிதம் எழுதி விட்டான் (Andre Maurois), இதே போன்று பாரதியின் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 1907-ல் பாரதியின் பாடல்களை யாருமே நூல் வடிவில் வெளியிட முன்வராத சமயத்தில், அவனது பாடல்