பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் சிலவற்றைச் சிறு பிரசுரமாக வெளியிட்டு, அதனைப் பள்ளிகளில் இலவசமாக வினியோகிக்கவும் நிதி உதவி செய்த வர் வி, கிருஷ்ண சாமி ஐயர். ஆயினும் மிதவாதியான கிருஷ்ணசாமி ஐயர் 1909 அக்டோபரில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிப் பதவி.மீ)ய ஏற்று அரசாங்கத்தோடு ஐக்கியமாகி விட்டபோது பாரதி அதனைக் கண்டு கொதிப்படைந்தான். அப்போது பாரதியை ஆசிரியராகக் கொண்டு புதுவையிலி ருந்து வெளிவந்த 'விஜயா' தினசரிப் பத்திரிகையில் பாரதி ஒரு தலையங்கத்தின் மூலமாகவே அவரைத் தாக்கி எழுதி னான் . * 'எதிர்க்கிறாயா? துணை செய்கிறாயா? என்று ஒருமை யில் கோபாவேசத்தோடு தீட்டிய அந்தத் தலையங்கத்தில்,

  • " காங்கிரஸ் ஸபையில் உயிரை வைத்ததுடோ ல நீர் பேசிய

கதையெல்லாம் இப்போது எப்படியாயிற்று? சொல்லு கிறேன். கேட்கிறீரா? வஞ்சனை, நடிப்பு, ஏமாற்று, பாவனை, வேஷம், பொய்! வி. கிருஷ்ணஸ்வா மி ஐயரே. சுமார் ஒன் றரை வருஷத்துக்கு முன் மைலாப்பூரில் உமது வீட்டிலே ஓர் ஸ்வதந்திர பக்தருடன் நீர் சம்பாஷணை செய்து கொண்டி ருந்த காலத்தில் மிக உருக்கமுடன், 'உம்மைப் போலவே நாங் களும் ஸ்வதந்திர தாகமுடையவர்களாகத் தானிருக்கிறோம், உமக்கு இந்த நாட்டிலுள்ள பக்தி எங்களுக்குமுண்டு. உமது உபாயங்கள் வேறு. நமது லக்ஷயமொன்றுதான் , இதுபற்றி? நாம் பரஸ்பரம் விரோதம் பாராட்டலாகாது' என்று நீங்கள் சொல்லிய வார்த்தை நினைப்பிருக்கிறதா? அந்த ஸ்வதந்திர தாகந்தான் இப்போது உம்மை ஹைகோர்ட்டு ஜட்ஜ் லேவையை ஒப்புக் கொள்ளும்படி தூண்டி விட்டதோ? நாளைக்கு அதே மனிதர் சென்னப்பட்டினத்தில் ஸ்வதந்திர போதனை செய்யும் பக்ஷத்தில் போலீசார் அவரைப் பிடித்து உமது முன்னே நிறுத்துவார்களே, நீர் 'தபையையும்' நீதி யையும் கலந்து 8 வருஷம் கடுங்காவல் விதிப்பீரே, 'நம் மிரு திறத்தாரின் லகூடியம் ஒன்றுதான். சந்தேகமா? சீச்சீ! வி. கிருஷ்ணஸ்வாமி ஐயரே! என்ன வார்த்தை காணும் சொல்லி விட்டீர்?... இப்போது அந்த வார்த்தை சொல்லு வீரா? ஐயோ, வி. கிருஷ்ணசாமி ஐயரே, என்ன ஜன்ம மெடுத்து விட்டீர்! என்று எழுதித் தீர்த்து விடுகிறான்,