பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதில் பாரதி குறிப்பிடுகிற ஸ்வதந்திர பக்தர். பாரதியே தான். (பாரதி புளு தடல்-3-ரா, அ. பத்மநாபன்). . ஷெல்லி வாழ்ந்த காலத்தில் முன்னர் குறிப்பிட்டபடி இங்கிலாந்தில் புதிய விழிப்பு ஏற்பட்டிருந்தது : இந்தக் காலத் தில் பல சிறந்த இலக்கிய கர்த்தாக்களும் கவிஞர்களும் தோன்றினார்கள். இவர்களில் பைரன் , கீட்ஸ், லே ஹண்ட், கோலரிட்ஜ் முதலிய பல கவிஞர் பெருமக்களோடும் எழுத் தாளர்களோடும் ஷெல்லிக்கு நெருங்கிய நட்பும் பழக்கமும் இருந்தன. பாரதியின் காலமும் புதிய விழிப்பு ஏற்பட்ட காலம்தான். அவனும் அவன து காலத்தில் 'வ். வே. சு, அய்யர், அரவிந்தர் முதலிய அறிஞர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான். எனினும் கவிஞர்களைப் பொறுத்த வரையில், எட்டயபுரத்துக் 'கவுண்டனூர்ப் புலவர்களின் பரிசயம்தான் அவனுக்கு அதிகம். அவன் காலத்தில் "நாட்டின் புதிய விழிப்போடு ஒட்டி வளர்ந்த ஒற் றைத் தனிக் கவிஞனாக அவன் மட்டுமே விளங்கினாள். குறிப் பிட்டுச் சொல்லுமளவுக்கு அத்தகைய எந்த ஒரு கவிஞனும் அவன் காலத்தில் தமிழகத்தில் உருவாகியிருக்கவில்லை. தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் பாரதியின் காலத்துக்குப் பின்பே இலக்கிய உலகின் கவனத் தைக் கவரும் கவிஞர்களாக மலர்ந்தனர். . . பாரதியும் ஷெல்லியும் அற்பாயுளில் மறைந்து போனவர் கள்; எனினும் அந்தக் குறுகிய காலத்திலும், சிரஞ்சீவித் தன்மை வாய்ந்த பல படைப்புக்களையும் வழங்கிச் சென்ற வர்கள். ஷெல்லி. இளமையிலேயே நாவல் எழுதி வெளி யிட்டான்; மற்றும் அரசியல் கட்டுரைகள், துண்டுப் பிரசுரங் கள், இலக்கிய விமர்சனங்கள், தத்துவார்த்தக் கட்டுரைகள் முதலிய வசன இலக்கியங்களோடு, ஏராளமான கவிதைகளை யும் படைத்தளித்தான், பாரதியும் அவ்வாறே வசன இலக் கியத்தின் பல்வேறு துறைகளிலும் புதிய சிந்தனைகளைத் தரும் பல படைப்புகளைத் தந்து, அத்துடன் சிறந்த கவிதைகளையும் வழங்கினான் என்பதை நாமறிவோம். ' . , ' ' . இத்தனைக்கும் மேலாக, இந்த இரு கவிஞர்களும் உயிர்