பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்ந்த காலத்தில் இவர்களை அவரவரின் நாடு சரிவர உணர்ந்து கொள்ளவில்லை. ஷெல்லியிகள் பெருமையை ஆங்கில இலக்கிய உலகம்கூட முற்றிலும் உணரவில்லை; அங்கீகரிக்கவில்லை, அவனை ஓர் அபாயகரமான பேர்வழி வாகவும், அராஜகவாதியாகவும் தான் இலக்கிய உலகம் பொதுவாகக் கருதியது. இதனால் அவனது அருமையான புரட்சிப் படைப்புக்கள் பலவும் அவனது மரணத்துக்குப் பின்னரே அச்சேறும் வாய்ப்பைப் பெற்றன. அவனது நெருங்கிய நண்பர்களில் சிலர்தான் அவனது பெருமையை உணர்ந்திருந்தார்கள். பாரதியின் கதையும் இதுதான் என்பதை நாமறிவோம். சிறந்த தேசிய கலியாக விளங்கிய பார் தியின் பெருமையை அந்நாளில் தேசியத் தலைவர்களாக விருந்த சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சத்தியமூர்த்தி முதலியோரும்கூட, அவன் உயிர் வாழ்ந்த காலத்தில் நன்குணரத் தவறிவிட்டார்கள் (மகாகவி பாரதியz Yit-ல. ரா.). அவனது நெருங்கிய நண்பர்கள் தான் அவனது பெருமையை நன்கறிந்திருந்தார்கள், ஷெல்லியைப்போல் பாரதியின் புகழும் அவனது மரணத்துக்குப் பின்னர்தான் ஒங்கத் தொடங்கியது. ஷெல்லியின் மரணத்துக்குப் பின்னர் பதி னேழு ஆண்டுகள் கழித்து, அவனது கவிதைகள் அனைத்தை யும் முழுமையாகத் தொகுத்து 1839-ம் ஆண்டில் வெளி விட்ட காலத்தில், அவற்றின் தொகுப்பாசிரியரான அவனது மனைவி மேரி ஷெல்லி பின்வருமாறு எழுதினாள்: அவர் இறந்து விட்டார்; அப்போது உலகம் அதுபற்றி எந்தவோர் அறிகுறியையும் வெளிக் காட்டவில்லை. ஆனால் மனித குலத்தின் மீது அவருக்குள்ள செல்வாக்கு , வளர்ச்சி யிலே மெதுவாக இருந்தபோதிலும், துரிதமாக அதிகரித்து வருகிறது; அவரது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை வின் வளர்ச்சி மாற்றங்களில், அவரது தீவிரமான போராட் டங்களின் விளைவை நாம் ஓரளவு காணலாம். தாமதமாகி விட்ட போதிலும்கூட, அவர் பட்ட பாடுகள் வீண்போக வில்லை என்ற அர்த்த பாவத்தில், அவர் அத்தனை ஆர்வத் தோடு நேசித்த சுதந்திரத்தின் முன்னேற்றத்திலும், அதன்