பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய நிலைமையிலும், அவரது ஆத்மா மேன்மேலும் சாந்தி பெறுகிறது. அவர் இறந்துவிட்டார்; அவரை நன்கறிந்த தவர்கள் மத்தியில் அவரது. ஸ்தானம் என்றுமே குன்றிவிடவில்லை,...” ( ஷெல்லி கவிதைத் தொகுப்பின் முன்னுரை - 1839). ஷெல்லியைப் பற்றிக் கூறியுள்ள இந்த வரிகள் பாரதிக் கும் அப்படியே பொருந்தும் என்பதைப் பாரதியை நன்கறிந்த விருப்பு வெறுப்பற்ற விமர்சகர்கள் தயங்காமல் ஒப்புக் கொள்வர். இனி இவ்விரு கவிஞர்களின் கருத்தோட்டங் களையும் கவிதைகளையும் கொஞ்சம் விரிவாக ஒப்பு நோக்கு வோம்.