பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுக்கள் வில , English W. M. Payn ஒரே வார்த்தையில் சொன்னால், கவிதையானது தகுதி வாய்ந்த நடைமுறைப் பிரச்சினைகளோடு தன்னைச் சம்பந்தப் படுத்திக் கொள்வதில் பயப்படத் தேவையில்லை என்ற தனது மகோன்னதமான க ைநிலையிலிருந்து. எந்த விதத்திலும் விலகிச் செல்லாமலே, முன்னேற்றத்துக்குதவும் கருவியாக மாறுவது முற்றிலும் சாத்தியம் என்ற கொள்கையை , நமது இலக்கியத்தில் நிலைநிறுத்தும் மிகப்பெரும் வெற்றிகரமான சான்றாக, ஷெல்லியின் எழுத்துக்கள் விளங்குகின்றன* > (The Greater English Poets of the 19th Century- W. M. Payne) இதே கூற்றை நாம் பாரதிக்கும் அப்படியே சொல்ல முடியும். இந்த உண்மையை இருவரது படைப்புக் களுமே நிரூபிக்கின்றன, ஷெல்லி ஆக்ஸ்போர்டில் படிக்கப்போன காலத்திலேயே புரட்சிக் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டான். 'நாஸ்தி கத்தில் அவசியம்' என்ற நூலை அவன் ஒரு கற்பனையான பெயரில் எழுதி வெளியிட்டதை முன்னர் பார்த்தோம். அதற் கும் முன்பே அவன் பல கற்பனைப் பெயர்களில் கவிதைகள், எழுதி வெளியிட்டான், ஷெல்லி பிறப்பதற்குச் சில ஆண்டு களுக்கு முன்னர் 1786-ம் ஆண்டில் மார்கரெட் நிக்கல்ஸன் என்ற சலவைத் தொழிலாளப் பெண்ணொருத்தி மூன்றாம் ஜார்ஜ் மன்னனைக் கொல்ல முயன்றாள். ஷெல்லி அவளது பெயரைப் பயன்படுத்தி, அவள் எழுதிவைத்துப் போனவை என்று சொல்லி, தானே சில பாடல்களை கூறி, அவற்றை ஜான் பிட்ஸ் விக்டர் என்ற அவளது கற்பனை உறவினரொரு வர் கண்டெடுத்து அறிமுகப்படுத்துவதாகக் கூறி அவற்றை வெளியிட்டான், அதிலேயே சுதந்திரம், சமாதான ஆர்வம், முடியாட்சிக்கு எதிர்ப்புமுதலிய கருத்துக்கள் இடம் பெற்றன. ஆச்ஸ்போர்டை விட்டு வெளியேற்றப்பட்டபின் ஷெல்லி வறுமையில் வாடிக்கொண்டிருந்தபோதிலும், வேல்ஸ் பிரதே சத்திலுள்ள விவசாயிகளின் நிலைமைகளைக் கண்டு வருவதாகக் கூறி, லண்டனிலிருந்து கால்நடையாகவே 'வேல்சுக்குச் சென்றான். லண்டனைவிட்டுப் பிரிந்து செல்லும்போது அவன் எழுதிய அந்த இளமைக் காலக் கவிதை (On leaving London for Wales), :