பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- **நான் நண்பர்களற்ற ஏழைகளின் நண்பன்; அவர்களது நேர்மையான லட்சியத்தை நான் பைத்தியக்காரத்தனமாக ரத்தக்கறை ப டி ய ச் செய்யாதிருப்பேனாக! என் று முத்தாய்ப்பு பெறுகிறது (வரிகள் 35-38): (I am the friend of the unfriended poor- Let me not madly stain their righteous catase in gore). எனவே ஷெல்லி இளமையிலேயே ஏழைகளின் நண்பு னாகவும், அவர்களது லட்சியத்துக்குப் போராடுபவனாகவும் தன்னைத் தானே அர்ப்பணித்துக்கொண்டான். இதே வறுமை நிலையில் அவன் ஹா ரியெட்டை மணந்து மு டி ந்த பருவத்தில், அவன் அவளையும் அழைத்துக்கொண்டு அயர்லாந்துக்குச் சென்றான். அங்குள்ள. கத்தோலிக்கர்களின் உரிமைகள் பல பறிக்கப்பட்டிருந்தன. அந்த அநீதியை எதிர்த்து, அந்த மக்களை ஒன்று திரட்டவும், அவர்கள் மத்தியில் நியாயத்தைப் போதிக்கவும் அவன் விரும்பினான். அதற்காக, ஐரிஷ் மக்களுக்கோர் அறிக்கை ஒன்றை எழுதி அச்சிட்டான். அந்தப் பிரசுரத்தை அந்த மக்களிடம் வினியோகிப்பதற்கு அவன் விசித்திரமான வழிகளை யெல்லாம் கையாண்டான். தான் தங்கியிருந்த விடுதியின் மாடியிலிருந்து தெருவில் போகிறவர்களில் தகுந்த நபர் எனத் தனக்குத் தோன்றும் மனிதர்களை நோக்கி, அந்தப் பிரதிகளை விட்டெறிவது , மதுபானக் கடைகளிலே பிரதி களைக் கைவிட்டு வருவது, பாதசாரிகளின் பைகளுக்குள்ளே அவர்கள் அறியாமலே ' பிரதிகளைக் கைநழுவ விடுவது முதலிய பல வழிகளைக் கையாண்டான். இத்தகைய விசித்திரமான வழிமுறைகளை அவன் வேறு சமயங்களிலும் கையாண்டதுண்டு. அதாவது தனது புரட்சிப் படைப்புக் களைப் பாட்டில்களில் அடைத்துக் கடலில் மிதக்க விடுவது, பலூன்களிலே கட்டிப் பறக்க விடுவது முதலிய முறை களின் மூலமும் அவன் தன் கருத்துக்களை ரகசியமாகப் பரப் பியதுண்டு, அயர்லாந்தில் அவன் மேற்கொண்ட நடவடிக் கையால் அவனுக்குச் சிறைவாசம் கிட்டிவிடுமோ என்று