பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாரியெட் அஞ்சினாள். அப்படியெதுவும் நேரவில்லை. ஆனாலும் அந்த ஆபத்து இருக்கத்தான் செய்தது. ஷெல்லி அயர்லாந்துக்குச் சென்றிருந்த சமயத்தில் "1"8 12-ம் ஆண்டில் ஸ்பானிஷ் அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோவில் புரட்சி நடப்பதாகச் செய்தி வந்தது. விடுதலை இயக்கம் எங்கே நடந்தாலும் அதனை வரவேற்கத் தவறாத ஷெல்லி, உடனே அந்த மெக்ஸிகோ புரட்சிவாதிகளை - வாழ்த்திக் கவிதை பாடினான். அந்தக் கவிதையிலே (Ta. the Repuம்!- Cats of North America), < 6 உரக்கக் கோஷியுங்கள்! ஊழலின் சிம்மாசனத்தின். கீழ் ஒடுங்கிக் கிடந்த ஒவ்வோர் அடிமையும் மனிதனாக விழித்தெழட்டும்! விலங்குகளையும், தளைக்கட்டுகளையும் ஒரு முனகல் கூட இல்லாமல் தைரியமாக எதிர்த்துச் சமாளிக் கட்டும்! என்று அவன் அறைகூவல் விடுத்தான் (நாதன் 11-18): (Shout aloud! Let every slave Crouching at corruption's throne Start into a man, and brave Racks and clains without a 'groan). இதே போன்று அவன் இத்தாலிக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்த காலத்தில், ஸ்பெயின் நாட்டு மக்கள் விடுதலைப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றதற்கு முன்பே 18 19-ம் ஆண்டில், அந்த மக்களுக்கு அவன் ஒரு வாழ்த்துக் கவி (An Ode) பாடினான்; * 'விழித்தெழுங்கள்! விழித்தெழுங்கள்! விழித்தெழுங்கள்! அடிமையும் கொடுங் கோலனும் இரட்டைப் பிறவிச ளான" எதிரி கள் . உங்களது உறவினர்கள் 'துஞ்சி மறைந்த அதே மண்ணில் குளிரும் விலங்குகளெல்லாம் அறுந்து விழட்டும்! தாம் நேசிப்பவர் களான மக்களின் உரத்த குரல்கள், புனிதப் போராட் டத்திலே பூமிக்கு மேலிருந்து ஒலிப்பதை அவர்கள் கேட்கும் போது. சமாதிக்குழியிலுள்ள அவர்களது எலும்புகளெல் லாம் துடித்தெழுந்து-அசையும்!: {வரிகள் 8-*+]: பா. ஷெ-4