பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Awaken! Awaken? Awaken! The stave and the tyrant are twin born foes; Be the cold chains shaken To the dust where your kindred repose, repose: Their bones in the gave will start and move, When they hear the voices of those they love, Most loud in the holy Combat above).. இவ்வாறு அந்தச் சுதந்திரப் போரைப் பல பாடல் சுளிலே அவன் வாழ்த்தி வரவேற்றுப் பாடினான். இதன் பின்னர் ' சுதந்திரப்பனுவல்' (0de to Liberty) என்றும் அதே காலத்தில் ஓர் அருமையான நீளக் கவிதையையும் அவள் எழுதினான். அந்தக் கவிதையில் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் முதலிய பல நாடுகள் நடத்திய சுதந்திரப் போராட்டங்களையும், அதில் பெற்ற வெற்றிகளையும் வாழ்த்தினான். சுதந்திரத்தை நோக்கி விளிப்பதாக அனமந்த இந்தக் கவிதை ஓர் அற்புதமான கவிதை. அந்தக் கவிதையில் சுதந்திரத்தைப் பூலோக சுவர்க்கமாக (Thou, Heaven of Earth!) அவன் வருணித்தான். கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதன்ஸ் விழிப்புற்றதை வருணிக் கின்றபோது, அங்கு சுதந்திரம் மலர்ந்ததால், சிற்பங்களும் கலாசிருஷ்டிகளும் பெருகின என்று அவன் கூறுகிறான் : | * 'ஒரு தெய்வீக சாதனை! மேலும் தெய்வீகமான ஏதென் எரிலோ, வைரம் பதித்த மலையின் மீது நிறுவியது போல, மனிதனின் மனோவுறுதியின் மீது, மண்டபக் கால்கள் கொடு முடி பாய் உயர்ந்து பளபளத்தன. ஏனெனில் நீ (சுதந்திரம்) அங்கிருந்தாய். உனது முதலாரம்பமான சிம்மாசனமாகவும், சமீபகாலத்தின் தீர்க்கதரிச ன பீடமாகவும் விளங்கும் அந்தக் குன்றின் மீது நிரந்தரமாக இறந்து போனவர்களை நோக்கி நகைக்கும் வடிவங்களோடு ச ல ல வ ச் கல்லாலான லிமரத்துவமாக உனது சர்வாம்சமான சிருஷ்டித் திறன் அனைத்தும் குடிகொண்டு விளங்கியது (பாட்டு - 5) : (A divinie work! Athens, diviner yet, Gleaned with its chest of columns, On the will