பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் குறிப்பு - (முதற் பதிப்பு) இந்நூல் நமது மகாகவி பாரதியையும் ஆங்கில நாட்டு மகாகவி ஷெல்லியையும் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆராய்ச்சியாகும்." - மேல் நாட்டுக் கவிஞர்கள் பலரிலும், பாரதியின் இதயத் தைப் பெரிதும் பறித்து, எண்ணத்தைப் பெரிதும் பக்குவப் படுத்திய ஒரே கவிஞன் ஷெல்லிதான். பாரதி தனது இலக்கிய வாழ்வில் முதன் முதலில் புனைந்து கொண்ட புனைபெயரே

  • ஷெல்லிதாசன்' என்பதை அவனது வரலாற்றை அறிந்த

தமிழன்பர்கள் அறிவார்கள். அந்த அளவுக்கு ஷெல்லியிடம் - பாரதிக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. பாரதியைப் . போலவே ஷெல்லியும் பெரும் புரட்சிக் கவிஞன் தான். எனவே புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தனக்கு மூத் தோனும் முதல்வனுமாக இருந்த ஷெல்லியிடம் பாரதி ஈடுபாடு கொண்டிருந்தது வியப்பல்ல. எனினும் இந்த இரு பெருங் கவிஞர்களையும் விரிவாக , ஒப்புநோக்கிக் காணும் முயற்சி தமிழில் இதுவரையிலும் இல்லை. இந்நூல் அத் தகையதொரு முயற்சிதான். .

  • இளமை முதலே பாரதியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்

டிருந்த நான் பாரதியைப் பலவிதத்திலும் ஒத்திருந்த ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிடமும் நெடுங் காலமாகவே ஈடுபாடு கொண்டு வந்திருக்கிறேன். மேலும் ஷெவ்லியை நான் கற்கத் தொடங்கிய காலத்திலிருந்தே பாரதியை நினைவில் நிறுத்திக் கொண்டுதான் அவனைக் கற்று வந்தேன், இதன் விளைவாக இந்த இருபெருங் கவிஞர்களையும் ஒப்பு நோக்கி, ஒரு பெரும் நூலையே உருவாக்கும் அளவுக்கு எனக்குக் குறிப்புக்களும் ஆதாரங்களும் குவிந்து வந்தன ; "இந்தக் கல்வியின் பயனாக உருவானதே இந்நூலாகும். இந் நூலில் நான் சேகரித்தும் குறித்தும் வைத்துள்ள குறிப்புக்கள், அனைத்தையும் பயன்படுத்துவதற்கு இயலாது போய் விட்டாலும், இருவரையும் ஒப்பீடு செய்வதில் முக்கியமான