பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்சங்கள் அனைத்தையும் போதுமான அளவுக்கு முறைப் படுத்திக் கூறியுள்ளேன் என்றே கருதுகிறேன். பாரதியையும் ஷெல்லியையும் விரிவாக ஒப்பீடு செய்தாக வேண்டிய ஓர் இலக்கியத் தேவை இதன் மூலம் குறீப்பிடத்தக்க அளவுக்குப் பூர்த்தியாகும் என்றும் நம்புகிறேன், பாரதியை அறிந்துள்ள அளவுக்குத் தமிழ் வாசகர்கள் ஷெல்லியை அறிந்து கொண்? டிருக்க வாய்ப்பில்லை, எனவே தமிழறிந்த வாசகர்கள் தாமதித்த பாரதியோடு, தாம் நன்கறியாத ஷெல்லியை ஒப்பு நோக்கிக் கற்கும் காலத்தில், அவர்கள் ஷெல்லியைப் பற்றிப் போதுமான அளவுக்குத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். இதனால் இந்நூல் ஒரு விதத்தில் ஷெல்லி யைத் தமிழ் வாசகர்களுக்கு இனங் காட்டும் அறிமுக மாகவும் அமைந்துள்ளது எனலாம். இந்நூலைப் பொறுத்தவரை எனக்கு ஒரே ஒரு குறை உண்டு. இதில் மேற்கோள் காட்டியுள்ள ஷெல்லியின் கவிதைப் பகுதிகளைச் செய்யுள் வடிவத்தில் தமிழாக்கித் தந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்பதே அந்தக் குறை. எனினும் அவற்றைக் கவிதை வடிவில் மாற்றித் தருவதற்கு எனக்குப் போதிய அவகாசமும் பொறுமையும் இல்லாது போய் விட்டன. எனவே அவற்றின் கருத்தை மட்டும் வாசகர்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு, அவற்றை 'இலைத்த' வசனத்தில் மொழி பெயர்ப்பாகவே தர நேர்ந்து விட்டது. அதே சமயம் ஆங்கிலமறிந்த வாசகர்கள் ஷெல்லி வின் கவிதைகளிற் காணும் வலுவையும் வனப்பையும் மூலத் திலேயே படித்தனுபவிப்பதற்கு வாய்ப்பாக, மேற்கோள் சளின் மூலம் பகுதிகள் அனைத்தையும் ஆங்காங்கே அடைப்புக் குறிகளுக்குள் தந்திருக்கிறேன். இதனால் இந்த ஒப்பீட்டை அவர்கள் மேலும் நன்றாக ரசித்துணர இயலும் என நம்புகிறேன். மொத்தத்தில் பாரதியிடம் பற்றுக் கொண்ட இலக்கிய ரசிகர்களுக்கு இந்நூல் புதுமையும் திருப்தியும் வழங்குமொரு நல்விருந்தாக அமையும் என்பதிலும், என து ஏனை யு' நூல் களுக்குக் கிட்டிவந்துள்ள வரவேற்பு இதற்கும் கிட்டும் என் பதிலும் எனக்கு நிறைந்த நம்பிக்கையும் உறுதியும் உண்டு. திருநெல்வேலி, ) மே, 1984, ரகுநாதன்