பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பு பற்றிய எனது குறிப்பு - மயும் சொல் சேர்த்து. 7. புதிய கே. இந் நூலின் முதற்பதிப்பு அச்சேறிய காலத்தில், அதனைப் பாரதி தின வெளியீடாக வெளிக்கொணரத் தீர்மானித்ததன் காரணமாக, அந்தப் பதிப்பு சற்றே அவசர.. கோலத்தில் அச்சாயிற்று. . அதன் விளைவாக, அப் பதிப்பில் தவிர்க்கொணாத விதத்தில் சில தவறுகளும் அச்சுப் பிழை களும் இடம் பெற்று விட்டன. இந்தப் பதிப்பில் அவற்றையெல்லாம் நான் களைந்து திருத்தியுள்ளதோடுகூட, சில புதிய தகவல்கள், புதிய மேற் கோள்கள் முதலியவற்றையும் சேர்த்து, இந்தப் பதிப்பை மேலும் செம்மையும் செழுமையும் பெறச் செய்திருக்கிறேன். முதற்பதிப்பின் ஆசிரியர் குறிப்பில் எனக்கு. இந்நூலைப் பொறுத்தவரை - ஒரு குறை இருப்பதாகக் குறிப்பிட் டிருந்தேன் ஷெல்லியின் ஆங்கிலக் கவிதைப் பகுதிகளைச் செய்யுள் வடிவத்தில் தமிழாக்கித் தந்திருக்கலாம் என்பதே. . அந்தக் குறை என்றாலும் இப்போதோ இது ஒரு குறை. யாகத் தோன்றவில்லை. அந்தக் கவிதைகளை நான் செய்யுள் வடிவில் தர முயன்றிருந்தால், ஒருவேளை அவற்றைத்..' தமிழாக்கம் செய்வதில் எனது திறமை வெளிப்பட்டிருக்க லாம். அதே சமயம் செய்யுள் வடிவத் தமிழாக்கத்தின் விளைவாகச் சில திரிபுகளும் தவிர்க்க முடியாதவையாக விளைந்திருக்கலாம். அவ்வாறு நேர்ந்தால், அதனால் எனது ஒப்பீட்டு முயற்சிக்கே ஊறு நேர்ந்திருக்கலாம், கருத்திலும் கற்பனையிலும் உவமையிலும் உருவகத்திலும் பாரதிக்கும் ஷெல்லிக்கும் இருந்த ஒற்றுமைகளை எடுத்துக் காட்டுவதே நூலின் தலையாய நோக்கமாகும், எனவே ஷெல்லியின் கவிதைகளை அவற்றின் பொருளும் வைப்பு முறையும் சிதையாமல், வசனத்தில் அப்படியே வழங்கியதுதான் சரி