பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா என்பதையும் நாம் உணர முடியும். சுதந்திரத்தை இழந்து அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு ஆவேச மூட்டவும், அவர்களைச் சுரண்டி வாழும் சமுதாய அமைப்பை ஒழிக்கவும் ஷெல்லியைப் போலவே பாரதி விரும்பினான். “ “ நண்பர் களற்ற ஏழைகளுக்கு நண்பனாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்ட ஷெல்லியைப்போல், பாரதியும் , ஈனப் பறையர்க ளேனும்-அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ ? --(வந்தேமாதரம் 1; பாடல் 2} என்று தன்னை அவர்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறன். அதேபோல் அந்த ஊமைச் சனங்' 'களின் வறுமையையும் துன்பத்தைக் கண்டு, கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன் காரணங்கள் இவை யென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சமென்றே-நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சு மடிகின்றாரே....... எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் புண்ணிய நாட்டினிலே-இவர் பொறியற்ற விலங்குகள் போல் வாழ்வார்.

  • -(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை &; 7)

என்றெல்லாம் பாரதி நெஞ்சு பொறுக்காமல் குமுறுவதை யும் நாம் காண்கிறோம். ஷெல்லி இங்கிலாந்து மக்களுக்கு அறைகூவல் விடுத்ததுபோல், 'விதையுங்கள். ஆனால் கொடுங்கோலரை அறுக்கவிடாதீர்கள்!' என ஆணையிட்டது போல், - ஏற்ப+ரைப் பணிகின்ற காலமும் போச்ச-நம்மை ஏய்! போருக் கேவல்செயும் காலமும் போச்சே!... ... நல்லோர் பெரியேரென்னும் காலம் வந்ததே-கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே !