பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் !-வீணில் உண்டு களித்திருப் போரை நிந்தனை செய் வோம் ! விழலுக்கு நீர்பாய்ச்சி மயமாட்டோம்!-வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்! -(பாட்டு 1, 3, 4) என்றெல்லாம் பாரதி தனது 'சுதந்திரப் பள்ளு'ப் பாட்டில் இந்திய மக்களுக்குப் புதிய கோஷங்களை உருவாக்கிக் கொடுப். உதையும், நாம் காண்கிறோம். அதே போன்று, சுரண்டலை . எதிர்த்து , மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? - மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ? --(சரணம்) என்று தனது 'பாரத சமுதாயப் பாட்டிலும் , பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்-பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்......... உடன் பிறந்தவர்களைப் போலே-இவ் உலகினில் மனித ரெல்லோரும் திடங் கொண்டவர் மெலிந்தோரை--இங்கு தின்று பிழைத்திடலாமோ? ' - (பாட்டு 23, 24) - என்று தனது 'முரசுப் பாட்டிலும் பாரதி குரல் கொடுப் பதைக் காண்கிறோம். இவையெல்லாம் ஷெல்லி இங்கிலாந்து மக்களுக்கு விடுத்த அறைகூவலின் எதிரொலி டே! லவே நமக்கு ஒலிக்கின்றன. 6எல்லா மனிதர்களையும் சகோதரர்களாகப் பாவித்து, எவ்விதச் சுரண்டலுமற்ற சுதந்திரத்தை விரும்புகின்ற பொழுதிலேயே, அந்த விருப்பத்தின் அடிப்படையில் சமத்துவக் கோட்பாடு தவிர்க்க முடியாதவாறு உருவாகி விடுகிறது. பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து ஆதர்சம் பெற்ற