பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம், சமத்துவம், ஞானம் எல்லாவற்றையும் அவன் ஒன்றாக இணைத் துக் காண்கிறான்: ..... for we Smiled on the flowery gave in which were lain Fear, Faith and Slavery; and mankind was free Equal and pure and wise in Wisdom's prophecy). மேலும் அதே காவியத்தில் அவன் எல்லோரும் சுதந்திரமாகவும், சமமாகவும் இருக் ஒட்டும்! (Let all be free and equall) (சருக்கம் 8, பாட்டு 17) என்று தனது கதாபாத்திரத்தின் மூலமாகப் பேசுகிறான். இத்தனைக்கும் மேலாக அதே காவியத்தில். அவன் ஒரு முழுப்பாடல் முழு வதிலுமே சமத்துவத்தைப் பலவாறு உவமித்துப் பாடி யுள்ளான். அக்காவியத்தின் கதாநாயகனான லயானின் சுற்றாக வரும் அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் பின் வருமாறு கூறுகின்றன: தெய்வீகமான சமத்துவமே! எல்லாவற்றுக்கும் மூத்தவளே! ஞானமும் காதலும் உனக்கே அடிமைகள் [Eldest of things, Divine Equality, Wisdom and Love are but slaves to thee (சருக்கம் 5)7. இந்த ப் பாடலில் புதிய சமுதாயத்துக்கே சமத்துவ தேவிதான் காரணகர்த்தாவாக விளங்குவதாகக் கூறப்படுகிறது. இத் தகைய புதிய சமுதாயத்தைப் பற்றி, ஷெல்லி வேறு பல கவிதைகளிலும் பாடியுள்ளான். உதாரணமாக, 'ராணரி மாப்' (Queen Mab) என்ற புரட்சிகரமான நெடுங்கவிதையில், மனித குலத்தின் விடுதலையையும் அதனால் மலரும் புதிய சமுதாயத்தையும் பலவாறு எடுத்துக் கூறும்போது

    • மனிதன் சமமானவர்களுக்கு மத்தியில் சமதையான ஒருவ

னாக நிற்கிறான். {(Man) Stands an equal amidst equals படலம் 8; வரி 227] என்று குறிப்பிடுகிறான், இதற் கெல்லாம் மேலாக, ஷெல்லி 'ராணி மாபி' ல் மானிட வர்க் கத்தின் பொற்காலத்தைப் பற்றிப் பலவாறு கனவு காண் கிறான். அவ்வாறு கனவு காணும்போது அந்தச் சமுதா யத்தில் நிகழும் வர்த்தகத் தன்மையைக் குறித்துப் பின் பவருமாறு கருதுகிறான்: 55