பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மிகவும் நேர்மையான இந்த வர்த்தகத்துக்கு, சுய நலத்தின் பேரம் பேசும் அறிகுறிகளோ, பா ழும் லாபத்தின் பேராசை பிடித்த கூட்டுறவோ, உணர்ச்சியற்ற, நீண்ட சாமர்த்திய சாகசங்களின் சதிராட்டங்களோ தேவையில்லை, அங்கு எல்லாமே நியாயமான, சமத்துவமான அளவினால் நிறுக்கப்படும்; அதன் ஒரு பக்கத்து அளவுகோல் மனித குலத்தின் நலமாகவும், மற்றொன்று நல்ல மனிதனின் இதய மாகவும் இருக்கும்” (படலம் 5, வரி 231-237): ('This commerce of sincerest virtue needs , No mediative signs of selfishness No jealous intercourse of wretched gain, No balancings of prudence, cold and long; in just and equal measure all is weighed, One scale contains the sum of human weal And one, the good man's heart). இவ்வாறு ஷெல்லி பல்வேறு கவிதைகளிலும் சமத்துவத் தின் மேன்மையையும் அது தியாவசியத்தையும் வற்புறுத்திச் செல்கிறான், பாரதியும் அவனது கவிதைகளில் பல இடங் களில் பல்வேறு கோணங்களில் நின்று சமத்துவக் கொள் கையை வற்புறுத்துகிறான், அவனுக்குச் சுதந்திரமும், 'சமத் து வமும்” ஒன்றோடொன்று இணைந்த வையாகவே தோன்று கின்றன. எனவேதான், சுதந்திரப் போராட்டத்துக்காக வந்தே மாதர கோஷம் போடும்போதே, எம்மதம் வ ய்த்திடுமேனும் -- நப் பூரில் நாவர் க்கு 1> அந் 5 நிலை பெ :துவாகும் (வந்தேமாதரம் 1: 5) என்று வாழ்விலும் தாழ்விலும் சமத்துவம் தேவை என்று பாரதி பாடுகிறான். அதேபோல், எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு! என்று பாடுகின்ற அதே மூச்சில், எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு! (சுதந்திரப்பள்ளு 2) - 55.