பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் *சுதந்திரப் பள்'ளில் பாடுகிறான். அவனைப் பொறுத்தவரையில் சுதந்திரமும் சமத்துவமும் இணைந்தே காட்சி தருகின்றன; அதுவே அவனுக்கு “ 'ஆனந்த சுதந்திர” மாகவும் தென்படுகிறது. மேலும், ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை ஜாதியில்..... மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே! (விடுதலை 2) என்று * விடுதலைப் பாட்டிலும், எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்தியா மக்கள் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்! (பாரத சமுதாயம்-சரணம் 4). என்று 'பாரத சமுதாயப் பாட்டிலும் அவன் சமத்து வத்தைப் புகழ்ந்து பாடுகிறான். மேற்குறிப்பிட்ட 'ராணி மாப்' கவிதையில் ஷெல்லி காண்கின்ற கற்பனைக் கனவை, பாரதி தனது 'பாரத சமுதாயப் பாட்டில் பிண்டப் பிரமாணமான சமுதாயக் காட்சியாகக் காண்கிறன். அதாவது, முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை (அனுபல்லவி) என்று திட்டவட்டமான ஒரு சமுதாய அமைப்பை வரை யறுத்து, அந்த வரையறுப்பின் அடிப்படையில் பாரத நாட்டின் சமத்துவப் பாதையையும் தேவையையும் தர்க்க ரீதியாக வகுத்துரைத்து, இறுதியிலே ஷெல்லியைப்போல்

  • 'எல்லாரும் ஓர் நிறை" என்று பாரதி எடை போடுகிறான்.

சொல்லப் போனால் சமத்துவக் கொள்கையையும் அதன் பா. ஜெ-5, 37