பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்: ராணுவத்தான் கையிலுள்ள ரத்தக் கறை படிந்த வாளைத் திருகிப் பிடுங்கும் (வரிகள் 59-62) : (Kings are but dust - the last eventful day Will level all and make them lose their sway; Will dash the sceptre from the Monarch's hand And from the warrior's grasp Wrest the ensanguined brand). இதே போன்று ஷெல்லி தன் வாழ்நாளில் பல்வேறு சந் தர்ப்பங்களில் இயற்றிய பல்வேறு கவிதைகளிலும் மன்ன னைக் கொடுமையின் அவதாரமாகத்தான் காண்கிறான். அவனது “ இஸ்லாமின் புரட்சி' யில் மன்னனை ' 'ஓர் இதய மற்ற மிருகம், ஓர் அலங்காரக் கொலு: ஒரு பெயர்" (A King, a heartless beast, 3 /pageant, and a narme" சருக்கம் 7, பாட்டு 5) என்று அலட்சியமாகக் குறிப்பிடுகிறான். அவனது முதற்பெரும் புரட்சிப் படையலான 'ராணி மாப்' என்ற நூலில் மன்னராட்சியைக் கண்டனம் செய்து பல வரிகள் பாடியுள்ளான், மன்னன் அவனது ஆத்மாவையே படு கேவலமாகப் பிணைத்திருக்கும் முலாம் பூசிய சங்கிலியை அணிந்திருக்கிறான்; அவனைப் பரிவாரங்கள் அரசன் எனக் கேவிப் பெயரால் அழைக்கின்றனர்; ஆனால் அந்த அசீடனோ கீழ்த்தரமான பசிகளுக்கும்கூட அடிமையாகவுள்ளான். அந்த மனிதனோ வறுமையின் கூக்குரலுக்குச் செவி சாய்ப்ப தில்லை; அனாதை அந்தரங்கமாக முணுமுணுக்கும் ஆழ்ந்த வசை மொழிகளைக் கண்டு அவன் புன்னகை புரிகிறான்; ஆயிரக்கணக்கானவர்கள் முனகும் போதும் அவனது ரத்த மற்ற இதயத்தில் ஓர் அலட்சியமான ஆனந்தம் குடிகொள் கிறது.... ** என்றெல்லாம் மன்னனைச் சித்திரித்துக் கொண்டு செல்கிறான்: {படலம் 3, வரிகள் 30-37). (The king, the wearer ofa gilded chain That binds his soul to objectiveness, the fool Whom courtiers nickname monarch, whilst a slave Even to the basest appetites--that man