பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Heeds not the shriek of pethury; he srailes At the deep Curses which the destitute Mutter in secret, and a sullen joy Pervades his bloodless heart when thousands groan...) அதே நூலின் மற்றொரு பகுதியில் மனித குலத்தின் மனிதத் தன்மையை நாசமாக்குவதிலும் நச்சுப் படுத்துவதி லும் மன்னர்களுக்கே முதல் இடம் அளித்துப் பாடுகிறான் . ஷெல்லி. "மன்னர்களும் மதகுருக்களும் ராஜ தந்திரங்களும் மானிட மலரை, அதன் மென்மையான மொட்டுப் பருவத்தி லேயே நாசமாக்குகிறார்கள்; அவர்களது செல்வாக்குப் பாழ டைந்த சமூகத்தின் ரத்தப்பசையற்ற ரத்த நாளங்களின் வழியே நுண்ணிய விஷம்போல் பாய்ந்தோடுகிறது' (படலம் 4, வரிகள் 104-107) எனக் கூறுகிறான்: (Kings, priests and statesmen blast the human tower Evera in its tender bad; their influence darts Like Subtle poisons through the bloodless veins of desolate society...) மேலும் வேறு பல கவிதைகளிலும் அவன் மன்னர்கள் இழைக்கும் அநீதிகளைக் கடிந்துரைக்கிறான். அரசாங்க அமைப்பைக் குறித்து அவன் ' மூன்றாவது பீட்டர் பெல்” (Peter Belt the Third) என்ற கவிதையில் பின் வருமாறு கூறுகிறான்: ஒரு நீதி மன்றம்; ஒரு மன்னன்; உழைப்ப தற்கான ஒரு மக்கள் கூட்டம்; ஒரு திருடர்களின் கூட்டம்; தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த, தாமே அனுப்பிவைத்த தம்மை யொத்த திருடர் கூட்டம்; ஓர் ராணுவம்; ஒர் ராஜ்யக் கடன்! (பாட்டு-4): {There is a chancery court; a king; A rmanufacturing mob; asset ' Of thieves who by themselves are sent Similiar thieves to represent; '. An army; and a public debt). இத்தகைய அரசாங்கம் மக்களைக் கசக்கிப் பிழிந்து வாங்கும் வரிக்கொடுமைகள் முதலியனவற்றையும் அவன் $ ,