பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயிற்றெரிச்சலோடு' குறிப்பிடுகிறான். 'வரிகளும் தான்! ஒயின், ரொட்டி, மாமிசம், பீர், தேயிலை, பால் கட்டி முதலிய வற்றின் மீதெல்லாம் வரி! இந்த வரிகளிலிருந்து அந்தச் சுத்த சுயம் பிரகாசத் தேசபக்தர்களுக்கு இரை போடப். படுகிறது! அவர்களோ தாம் தமது படுக்கையில் சொக்கி "விழுவதற்குமுன், இவையனைத் தின் பத்து மடங்கான் சாரத்

தையும் வயிறார விழுங்கித் தீர்க்கிறார்கள் (பாட்டு-7) என்று

மக்களை அரசாங்கம் உறிஞ்சி வாழ்வதைக் குறிப்பிடுகிறான்; (Taxes too, on wine and bread And meat, and beer, and tea, and cheese From which those patriots pure are fed Who gorge before they reel to bed The tenfold essence of these). மன்னராட்சியின் தன்மையை இவ்வாறெல்லாம் கண்டிக்கும் ஷெல்லி, கொடுங்கோல் மன்னர்கள் அழிக்கப் படவேண்டும் என்றும் விரும்புகிறான். அவனது 'இஸ்லாமின் புரட்சி' என்ற காவியமோ கொடுங்கோல் மன்னனின் - கொடுமைகளையும், அநீதிகளையும், குரூரங்களையும் பரக்க எடுத்துரைக்கின்றது. எனவே அதில் அவள் மன்னர்களின் சிம்மாசனங்கள் மறையவேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறான். 1'உங்களது செயலாற்றலின் பிரம்மாண்ட மான பேரொலி, அதன் புயல் வீச்சில் கொடுங்கோலர்களின் சிம்மாசனங்களைச் சிதறவடிக்கும் வரையிலும்-விழியுங்கள்! எழுங்கள்! என்று அவன் கோஷிக்கிறான் (சருக்கம் 2,

  • பாட்டு 13}:

(Awake! arise! until the mighty sound 0£ your career shall scatter in its gust The thrones of the oppressor. ...) இதனால்தான் அவன் சுதந்திரத்தை வாழ்த்திப் பாடி யுள்ள பாடலில் (dெe to Liberty), * 'ஆ! சுதந்திர புருஷர்கள் மன்னன் என்ற கொடிய பெயரையே மண்ணோடு மண்ணாக

  • மிதித்து ஒழிப்பார்கள்! (பாடல் 1 5) என்று "உணர்ச்சி

வேகத்தோடு பாடுகிறான்: 1A

62