பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

They stand on the brink of that mighty river, Whose waves they have tainted with death: It is fed from the depths of a thousand dells Around them it foams, and rages and swells, And their Swords and their sceptres 1 floating see Like Wrecks in the surge of eternity). , இவ்வாறு மன்னராட்சியையும் கொடுங்கோன்மையை யும் கடிந்துரைப்பதோடு, அவற்றுக்கு எதிர்காலம் இல்லை 'என்பதையும் அவன் உணர்கிறான். அதனால் அவன் கனவு காணும் புதிய சமுதாயத்தில் மன்னர்கள், செங்கோவிகள். எதுவுமே இடம்பெறாமல் போய்விடுகிறது. அந்த லட்சிய . சமுதாயத்தில் பூமாதேவி தனது இதயத்தில் மன்னர்களற்ற சிம்மாசனங்களைக் கொண்ட ராஜ்யத்தை உருவாக்கியதாக' ' (இஸ்லாமின் புரட்சி-சருக்கம் 7, பாட்டு 13) ('<The state of kingless thrones, whicl1 Earth did in her heart areate) ஷெல்லி கூறுகின்: இதே போன்று *'கட்ட று ந்த பிராமித்தியூஸ் (Prometheus Unbound) என்ற அவனது நாடகக் காப்பியத் தில், காலத்தின் ஆவி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்த லட்சிய சமுதாயக் கனவை ஷெல்லி வெளியிடுகிறான். அந்தச் . சமுதாயத்திலே, வெறுக்கத்தக்க முகமூடி கழன்று விழுந்து விட்டது; மனிதன் மட்டும் செங்கோலற்று, கட்டுப்பாடு களற்றுச் சுதந்திரமாக இருக்கிறான்; அச்சம், தெய்வ வணக்கம், அந்தஸ்து, வேற்றுமை முதலியவற்றிலிருந்து விலக்குப் பெற்றவனாய், வர்க்க மற்று, இனமற்று, தேசமற்று. சமத்துவமாக, தனக்குத்தானே மன்னனாக விளங்குகிறான் என்று அந்தப் பாத்திரம் பேசுகிறது (அங்கம் 3, காட்சி 4, வரிகள் : 93-197): (The loathsome mask has fallen, the nan remains Sceptreless, free, uncirclinscribed, but man . Hqual, unclassed, tirbeless, and nationless Exempt from awe, worship, degree, the king Over himself...). இந்த லட்சிய சமுதாயத்தில் ஷெல்லி வர்க்க பேதங் .