பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களும், உயர்வு தாழ்வுகளும் அற்ற, சகல் தேசங்களையும் அணைத்து நிற்கக்கூடிய சர்வதேசியமான மானிட சமத்துவம் வாய்ந்த ஒரு குடியரசை, மனிதனுக்கு மனிதனே உயர்ந் தவன் என்ற நிலையெய்தும் ஒரு மானிட சமுதாயத்தைக் கனவு கண்டிருக்கிறான் என்பதை நாம் உணர முடியும். - மன்னராட்சியையும், மன்னனற்ற குடியரசாட்சியை யும் பற்றிய ஷெல்லியின் கருத்துக்களை நினைவில் நிறுத்திக் கொண்டு, நாம் பாரதியிடம் வருவோமானால், பார திக்கும் ஷெல்லிக்கும் இத்தகைய கருத்துக்களில் மிகப்பெரிய உடன் பாடு இருப்பதை நாம் காணமுடியும், பாரதி ஷெல்லியைப் போல் எந்தவொரு மன்னனையும் வாழ்த்தாது இருந்துவிட "வில்லை. அவன் சிவாஜி மன்னனைப் பற்றிப் பாடல் பாடினான்; சிவாஜி தினத்தைக் கொண்டாடுவதுபோல் அக்பர் போன்ற சமரசம் நாடிய மன்னர்களின் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று கருதினான் (பாரதி புதையல்-இரண்டாம் பாகம்: கட்டுரை); இந்திய நாட்டுக்கு வந்த வேல்ஸ் இளவரசருக்கு வாழ்த்துப் பாடினான்; எட்டயபுர மன்னனின் பணிக்கிசைந்து, தன் தருக்கெலாம் அழிந்து போனதைக் குறித்து அவன் மனம் நொந்தபோதிலும், இறுதிகாலத்தில் வறுமையின் கொடுமை காரணமாக, அந்த மன்னனை வாழ்த்தி, சீட்டுக் கவிகூடப் பாடியுள்ளான். என்ற போதிலும், பாரதி மன்னராட்சியை ஆதரித்தவன் அல்ல. எனவேதான், நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி - நவம் புரிவாள் எங்கள் தாய். என்று பாரதத் தாயைப் (எங்கள் தாய்) பாடுகின்ற . அதே நேரத்தில், அவர்--- " அல்லவராயின் அவரை விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள். (பாட்டு 9) என்றும் அடுத்த அடியிலேயே பாடிவிடுகிறான். இதனால் பாரதி கொடுங்கோல் மன்னரை மட்டுமே' அழித்தொழிக்க வேண்டும் என்று விரும்பினான் என அர்த்தமாகிவிடாது.