பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர்களைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்களோடு முற்றிலும் உடன்பாடு கொண்ட ஒரு சித்திரத்தை நாம் இதில் காண்கிறோம். மன்னர்கள் வகுத்து வைத்திருந்த இந்தச் சொற்றை நீதி”யை 'பாஞ்சாலி சபதத்தில் துரியோதனனின் வாயிலாக நாம் அறிகிறோம். 5 மன்னர்க்கு நீதி ஒரு வகை--பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை" {பாட்டு 87) - என்று வியாழ முனிவன் சொன்னதைத் துரியோதனன் நினைவு கூர்ந்து அங்கீகரிக்கிறான். மேலும் அவன் * அரச நீதி' யைப்பற்றிப் பின் வருமாறு எடுத்துக் கூறுகிறான் : குழைதல் என்பது மன்னவர்க் கில்லை; கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்: பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய்; பிறரைத் தாழ்த்துவதில் சலிப்பு எய்தல், (பாட்டு 200} பிறரை அடிமைப்படுத்துவதில் சலிப்பு ஏற்படுவ தொன்றே அரசர்களுக்குப் பெரும் பிழையாக முடியும் என் பதும், எனவே கொஞ்சங்கூட மனக்குறைவு இல்லாமல் மேலும் மேலும் சுரண்டிச் செல்வம் சேகரிப்பதே அரச தருமம் என்பதும் துரியோதனன் கருத்து . ஆனால் 'வன் திறத்து ஓர் கல்லெனும் நெஞ்ச'னை துரியோதனனின் கூற்று என்று மட்டும் இதனைக் கொள்ளமுடியாது. அன்று நிலவிய பொதுவான அரச நீதியைத்தான் அவன் தந்தைக்கு நினைவூட்டுகிறான். இத்தகைய நீதியைத்தான் பாரதி "சொற்றை நீதி எனக் குறிப்பிடுகின்றான். பாரதியைப் பொறுத்தவரையில் அந்தக் காலத்து மன்னர்களையுங்கூட அவன் கோயிலில் பூஜை செய்யும் பூசாரியாகவும், வீட்டைக் காவல் புரியும் - காவல்.ளியாகவும்தான் கருதுகிறான் (பாஞ்சாலி சபதம்- பாடல் 219), மன்னர்களின் தெய்வீக அரசுரிமையை அவன் எங்கும் அங்கீகரிக்கவில்லை. எனவே, தான் தருமன் நாட்டை வைத்து இழந்ததும் 14 சிச்சி! சிறியர் செய்கை செய்தான்! (பாட்டு-219) என்று அவனது