பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலைக் காரி உமிழ்கிறான். மேலும் இதே சந்தர்ப்பத்தில் மன்னராட்சியின் தன்மைகளைக் குறித்துத் தனது கருத்துக் களை இரண்டு பாடல்களில் (பாடல்கள் 221; 2 21). கவிக் கூற்றாக நமக்குத் தெரிவித்து விடுகிறான் : நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல் நாரர்கள் என்று கருதார்; ஆட்டு மந்தையாம் என்று-உலகை அரசர் எண்ணி விட்டார் காட்டும் உண்மை நூல்கள்--பலதாம் காட்டினார் களேனும் நாட்டு ராஜ நீதி-மனிதர் நன்கு செய்யவில்லை. ஒரம் செய்தி டாமோதருமத்து உறுதி கொன்றி டாமே சோரம் செய்தி டாமே--பிறரைத் ஆயரில் வீழ்த்தி டாமே ஊரை ஆளும் முறைமை--உலகில் ஓர் புறத்தும் இல்லை. இவ்வாறு மன்னராட்சியைப் பற்றிய தனது கருத்துக் களை இடைமறித்துச் சொல்லி ' 'மேலே சரிதை சொல்லத் தொடங்குகிறான். மன்னராட்சியைப் பற்றிய பாரதியின் நிர்ணயிப்பை மேற் காட்டிய பல்வேறு பாடற் பகுதிகளி லிருந்து நாம் கண்டுணர முடியும். மேலும் பல்வேறு வித மான வரிகளைப்போட்டு, மக்களைக் கசக்கிப் பிழியும் அரசாங் கத்தையும், ஷெல்லியைப்போல் பாரதியும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அவன் எழுதியுள்ள 'கொள்கைக்கும் செய் கைக்குமுள்ள தூரம்' (கட்டுரைகள்-தத்துவம்) என்ற கட்டுரையிலுள்ள பின்வரும் வரிகள் அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தை மறைமுகமாகத் தாக்கும் வாசகங்களே என்பதை நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம் :

  • ' குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட் |

கார்ந்தால் வரி, நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி. காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி,