பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(A glorious people vibrated again " The lightning of the nations : Liberty From heart to dieart, from tower to tower o'er Spain Scattering contagious fire into the sky, Gleanet, ...) இத்தகைய மகத்தான, எடுப்பான தொடக்கத்தைப் போலவே, பாரதியும் ருஷ்யப் புரட்சியைப் பற்றிய தனது பாடலை, மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே; ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி! கொடுங் காலன் அலறி வீழ்ந்தான்! (புதிய ருஷ்யா : பாட்டு z} என்று மகோன்னதமான எடுப்போடு தொடங்குகிறான். மேலும் பாரதிக்கு ருஷ்ய நாட்டுப் புரட்சி குடியரசுக் கொள்கையின் கண்கண்ட வெற்றியாகத் தோன்றுகிறது. எனவே அந்தப் புரட்சியின் வெற்றியை, குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு , மேன்மையுறக் குடிமை நீதி - கடியொன்றில் எழுந்தது பார்; குடியர சென்று உலகறியக் கூறி விட்டார்; அடிமைக்குத் தளையில்லை; வாரு மிப்போது அடிமை யில்லை அறிக என்றார்! (பாட்டு 6) என்று நமக்கு அறிமுகப் படுத்துகிறான். ஷெல்லியும் பாரதி யும் குடியரசுத் தத்துவத்தை பிரெஞ்சுப் புரட்சியின் கோட்: பாடுகளின் அடிப்படையில் உருவாக்கினார்கள், கனவு கண்டார்கள் என்று முன்னர் பார்த்தோம். அந்த அடிப் படையில் ஷெல்லி மன்னனில்லாத மக்களாட்சியின் தன்மை களைப் பற்றிப் பலவாறாகக் கனவு கண்டான்; பாரதியோ அத்தகைய ஆட்சியின் தோற்றத்தையே காணக்கூடிய - பா : ஷ்ெ -~~8