பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தில் வாழும் பாக்கியத்தைப் பெற்றிருந்தான். இதனால், அந்தக் குடியரசு லட்சியத்தை மேலும் தெளிவாக வடித்துரைக்க அவனால் முடிகிறது என்பதை நாம் காண் இறோம். எனவேதான் அவன் புதுமை காணீர்!” என்று உலகினர் யாவரையும் நோக்கி உற்சாகத்தோடு குரல் கொடுக்கிறான், ருஷியப் புரட்சியின் வெற்றியைப் பார்த்து முடிந்த பின்னர்தான் பாரதியின் ‘பாரத சமுதாயம்' என்ற பாடல் பிறந்தது. அந்தப் பாட்டில், எல்லாரும் இந்நாட்டு மன்னார்-நாம் எல்லாரும் இந்தாட்டு மன்னர்---ஆம்

  • எல்லாரும் இந்நாட்டு மன்னர்!

(சரணம் 4} என்று முக்காலும் கோஷமிட்டு, பாரத சமுதாயத்தின் குடியரசு லட்சியத்தை அவன் ஆணித்தரமாக உறுதிப்படுத்து கிறான், “'கட்டறுந்த பிராமித்தியூஸ்! என்ற கவிதையில்

  • 'தனக்குத் தானே மன்னனாக விளங்கும் எதிர்கால

மனிதனைக் காணும் ஷெல்லியின் லட்சியக் கனவை, இங்கு பாரதி ஸ்தூலமான வடிவத்தில் வடித்துத் தருவதை நாம் காண்கிறோம். மேலும் இதே கருத்தின் மேம்பட்ட வளர்ச்சியை, அதாவது மனித குலத்தின் பூரணமான விடுதலை நிலையை, பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்--பரி பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்! (பாட்டு 5) என்ற 'சுதந்திரப் பள்ளுப் பாட்டின் இறுதி அடிகளிலே நாம் காண்கிறோம். மன்னராட்சியை எதிர்த்த ஷெல்லி மத குருக்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்தான். இளைஞனாக இருக்கும்போதே 'நாஸ்திகத்தின் அவசியம்' என்ற நூலைத் துணிச்சலோடு எழுதி, அதனால் பல்வேறு தொல்லைகளுக்கும் கண்டனங் களுக்கும் ஆளான ஷெல்லி மதகுருக்களின் ஆட்சியை எதிர்த்ததில் ஆச்சரியமில்லைதான். அவனது சுதந்திர லட்சி 74