பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யத்தில், லட்சியக் குடியரசில் மன்னனைப் போலவே மதகுரு வுக்கும் இடமில்லை. சொல்லப் போனால், மன்னனையும், மதகுருவையும் அவன் ஒரே மாதிரியான கொடுங்கோலர் களாகத்தான் காண்கிறான். முன்னர் காட்டிய மேற்கோள் களிற் கண்டதுபோல், மன்னனைப் பழிக்கும் பல இடங் களிலும் அவன் மதகுருவையும் இணைத்தே பழிக்கின்றான். அவனது 'சுதந்திரத்துக்கான பனுவலில் (0de 10 Liberty} கலகத் தலைவர்களும், மத குருக்களும் மனிதனை வேட்டையாடி. அடிமை கொண்டனர் எனக் கூறுகிறான்: * 'தங்கத்தையும், ரத்தத்தையும் உண்டு களிக்கும் கலகத் தலைவர்களும் மத குருக்களும் சாயமேற்றப்பட்ட தமது அந்தராத்மாக்களில் படிந்த கறையோடு, திகைப்புண்ட மனிதக் கூட்டங்களை எ ல் லாப் பக்கங்களிலிருந்தும் , விரட்டியடித்தார்கள் (பாட்டு 3}; '. (Anarchs and priests, who feed on1 gold and blood. Till with the stain their inni0$t souls are dyed Drove astonished herds of mein from every side). இவ்வாறு மனிதர்களை அடிமை கொள்வதில் பங்குதாரர் களாகவிருந்த மதகுருக்களையும் சுதந்திரதேவி ஒழிக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். மன்னனென்ற பெயரே மண்ணோடு போகவேண்டும் என்று சொல்லிய ஷெல்லி, மக்களின் மடமையைப் போக்கி, அதன் மூலம் மதகுருவைப் போக்கடிக்க வேண்டும் எனக் கருதுகிறான்: ( 'ஆ! ஞானிகள் தமது பிரகாசமான மனத்தால், இந்த " மங்கிய உலகத்தின் கவச கூடத்தினுள்ளே விளக்குகளை ஏற்றி வைப்பார்கள்; அத்தகைய விளக்கொளியில், முதலில் எந்தவொரு நரகத்திலிருந்து உருட்டிவிடப்பட்டதோ அந்த நரகத்துக்குள்ளேயே மதகுரு என்ற மங்கி வெளிறிய பெயரும் சுருங்கிக் குறுகி விழுந்து தொலையும்......" (பாட்டு 16): (Oh! that the wise from their bright minds would kindle Such lamps within the dome of this dim world, That the pale name of PRIEST might shrink and dwindle Intto the inely from which it was first luxled... ... }..