பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(War is the statestnan's game. the priest's delight . The lawyer's jest, the hired assassin's trade Arid, to those royal Yourderers whose triean thrCitnes Are bought fzy crimes of treachery athul gore, Tite bread they eat, the staff on which they leah). போரையும் பொருளையும் பற்றி ஷெல்லி இவ்வாறு கருதுவதால், அவன் கனவு காணும் புதிய சமுதாயத்தில் புதுவிதமான வர்த்தகமும், புதுவிதமான போரும்தான் இருக்க முடியும் என்று கூறுகிறான்: “'மனிதனின் வாழ் தாளில் ஒரு பிரகாசமான உதய காலம் வரக் காத்திருக்கின் றது; அப்போது உலகத்தின் இயற்கையான செல்வங்களது ஒவ்வொரு பரிவர்த்தனையும் நல்வார்த்தைகள், நற்செயல் கள், ஆகியவற்றின் வர்த்தக மாகவே இருக்கும்; அப்போது வறுமையும் செல்வமும், புகழ் வேட்கையும், இகழ்ச்சி, நோய், துயரம் ஆகியவற்றின் பயமும், அதன் லட்சோப் லட்சக் கணக்கான பயங்கரங்களோடு போரிடும்; அதனால் கொடிய நரகமென்பது காலத்தின் நினைவில் மட்டும்தான் வாழ்ந்திருக்கும்... ('ராணி மாப்', படலம் 5, வரிகள் 251-257}: {A brighter morn awaits the hurnan day, WZxed every trazzsfer of earth's natural gifts Shall be a commerce of good words and works; When poverty and wealth, the thirst of fatme, The fear of infamy, disease and woe, War with its million horrors, and ferce hell Shall live out in the memory of time....). எனவே தான் ஷெல்லி எழுதியுள்ள ‘அட்லாஸ் மோகினி ' (The Witc2 of Atlas) என்ற கவிதையில், “் போர்வீரர்கள் தாங்கள் கருமான்களாக மாறி, தமது வாள்களையெல்லாம் உழுபடைகளாக அடித்து உரு மாற்றுவதாகக் கனவு கண் 1டார்கள் என்று அவன் பாடியுள்ளான் {பாட்டு 75): -{"The soldiers drearned that they were black Smiths... Beating their swords to picughshares),