பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

The vainly rich, the miserable proud, The mob of peasants, tnobles, priests and kings And with blind feelings reverence the power That grinds them to the dust of misery; But in the temple of their hireling hearts Gold is a living God, and rules in scorin All earthly things but virtue), இவ்வாறு தங்கம் உயிருள்ள கடவுளாக மாறி உலகையே அடிமை கொள்வதால், மன்னர்களும் பொருளாசையின் காரணமாகப் போரையும் நாசத்தையும் கொண்டு வரு கிறார்கள் என்று கருதுகிறான் ஷெல்லி: ('கொடுங்கோலர்கள் மனித வாழ்க்கையையே விற்பனை செய்வதன் மூலம் தமது புலன் வேட்கைக்கும், புகழுக்கும், பெருநாசமும் தீராத பசியும் கொண்ட கர்வத்துக்கும் இரைதேடி, செல்வங்களைக் குவிக்கிறார்கள்; இதனால் வெற்றியானது அப்பாவித்தனமான உலகுக்கு அழிலையும், அவமானத்தையும், யுத்தத்தின் கொடு மைகளையும் வழங்கியுள்ளது (படலம் 5, வரிகள் 64-68): (Since tyrants by the sale of human life Heap; luxuries to their sensualism and farme To their wide-wasting and insatiate pride, Success has sanctioned to a credulous world The ruin the disgrace, the woe of war.) . இவ்வாறு மனிதர்கள் செல்வத்துக்கு அடிமைப்பட்டு அதனை வணங்குவதாலும், பொருளாசையாலும் போர் மூள்வதாகக் கூறும் ஷெல்லி, போரைப் பற்றிப் பின்வருமாறு முடிவு கட்டுகிறான் : போர்..., அது ராஜதந்திரியின் விளை யாட்டு; மதகுருவின் ஆனந்தம்; வழக்கறிஞனின் தமாஷ்; கூலிக்குக் கொலை புரியவனின் தொழில்; வஞ்சகம், ரத்தக் களரி முதலிய குற்றங்களால் வாங்கப்பட்ட கேவலமான சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கும் ராஜகுலக் கொலைகாரர் களுக்கோ, அது அவர்கள் உண்ணும். ரொட்டி; அவர்கள் சாயும் செங்கோல்!** ('ராணி மாப்' படலம் 4, வரிகள் 168-172};